• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-12 09:08:43    
ஓய்வு பெற்ற ஒரு நிபுணரின் நடவடிக்கை

cri

சீனாவில் 76 வயதான ஒரு இளைஞர் இருக்கிறார். ஏனென்றால், அவருக்கு, இளைஞர்கள் கூட கனவில் காண முடியாத ஒரு திட்டம் உண்டு. "அரசு முக்கியத்துவம் அளித்து பாதுகாக்கும் வன விலங்குகள் என்ற நூலை" டி.வி.டி தட்டாக அவர் தயாரித்து 200க்கும் அதிகமான நாடுகளுக்கு விற்பனை செய்து, கிடைத்த லாபம் அனைத்தையும் அறக்கொடையாக வழங்குவதே அவர்தம் திட்டம். அவர்தான், சீனாவின் குவாங்துங் மாநிலத்தின் புழுபூச்சியின ஆய்வகத்திலிருந்து ஓய்வு பெற்ற நிபுணர் லூ ச்சி சென் அம்மையார்.

இந்த ஆய்வகம் இந்த டி.வி.டி இன் சீன மொழி பதிப்பின் தயாரிப்புக்கு 20 ஆயிரம் யுவான் ஒதுக்கீடு செய்தது. ஆனால், இந்த டி.வி.டியின் 5000 பிரதிகள் அவரின் சொந்த செலவில் தயாரிக்கப்பட வேண்டும். இந்த டி.வி.டியின் ஆங்கில மொழி பதிப்பை தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்வதென்ற திட்டம் அவருக்கு உண்டு. உலகில் 200க்கும் அதிகமான நாடுகளில் எவ்வளவு பள்ளிகூடங்கள் உள்ளன. எவ்வளவு அதிகமான மாணவர்கள் இருக்கிறார்கள். இந்த பெரிய சந்தை திறந்துவிடப்பட்டால், இந்த டி.வி.டி, நல்ல விற்பனையாகும். அப்போது அறகொடை லட்சியத்தில் ஈடுபடுவதற்கான பணம் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று அவர் கூறினார்.

மனைவியைவிட கால்பந்து அதிகம் பிடிக்கும் பிரிட்டனில், ஆடவர்கள் மனைவியைவிட கால்பந்து அணிக்கு மேலும் விசுவாசமாகவும், நம்பிக்கையாகவும் தன்னையே தியாகம் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள் என்று பிரான்சு செய்தி நிறுவனம் கூறுகின்றது. சுமார் 2000 பிரிட்டிஷ் ஆடவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், 94 விழுக்காட்டினர், தாம் ஆதரிக்கும் கால்பந்து அணி எவ்வளவு மோசமாக இருந்த போதிலும் இதர கால்பந்து அணிகளை ஆதரிக்க மாட்டார்கள் என்று கூறினார்கள். ஆனால் மோசமடையும் காதல் உறவுக்கு முடிவு கட்ட விரும்புவதாக 52 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

ஆடவர்கள் தமது மனைவிக்கும் இவ்வளவு விசுவாசமாகவும், நம்பிக்கையாகவும் தியாக எழுச்சியையும் நேர்மையையும் காட்டினால், மணமுறிவு விகிதம் உடனே 50 விழுக்காடு குறையும் என்று உளவியல் வல்லுநர் அரிச் சீக்மன் கூறினார். விசுவாசம் என்ற பிரச்சினை, பணி, காதல் ஆகியவற்றில் மாற்றம் அடிக்கடி நிகழும் இக்காலகட்டத்தில், தாம் உண்மையாகவே நம்பும் ஒரு விஷயத்தில் அதாவது கால்பந்தில் மட்டும் விசுவாசம் இருக்கின்றது என்று ஆடவர்கள் கருதுகின்றனர் கால்பந்து தமக்கு ஒருவகை தேசிய பெருமையை தந்துள்ளது என்று 59 இங்கிலாந்து ஆடவர்கள் கூறினார்கள். ஆடவர்களுக்கு, தமது உணர்வை வெளிப்படுத்தும் வழிமுறையை கால்பந்து தந்துள்ளது என்று ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.