• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-12 19:16:53    
தொலைக்காட்சியின் பாதிப்பு

cri
இந்த கெட்ட வழக்கத்தை சரிபடுத்தாவிட்டால் குழந்தையின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படும். வளர்ந்த பின் கூட இந்த குழந்தையின் குணம் இயல்பாக முடியாது.

ராஜா.......இந்த நிலைமைக்கு டாக்டர் ஏதாவது யோசனை கூறுகிறாரா?

கலை......டாக்டர் லின் பல யோசனைகளைக் கூறுகிறார். எடுத்துக்காட்டாக, 1 வயதுக்குட்பட்ட குட்டிக் குழந்தை டிவி பார்ப்பதிலிருந்து தவிர்க்கப்பட வேண்டும். 1 முதல் 3 வயது வரையான குழந்தை நாளுக்கு இரண்டு முறை திபி பார்க்கலாம். ஒவ்வொரு முறையும் 15 நிமிடத்துக்குள் டிவியை நிறுத்திவிட வேண்டும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் ஒரு நாளில் டிவி பார்க்கும் நேரம் ஒரு மணிக்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

ராஜா.......நேரத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல, நிகழ்ச்சிகளையும் பெற்றோர்களே தேர்வு செய்ய வேண்டும். அறிவூட்டக் கூடிய கல்வி முக்கியத்துவம் வாய்ந்த ஒளி மெதுவாக மாறும் காட்டுன் திரைப்படங்களை தேர்வு செய்ய வேண்டும். திரைப்படங்களை தேர்வு செய்த பின் அது பற்றி குழந்தைகளிடம் விளக்க வேண்டும். பார்த்த பின் திரைப்படத்தின் அம்சம் பற்றி குழந்தைகளுடன் விவாதிக்க வேண்டும். நடிகர்களின் நடிப்பு, கதையின் முக்கிய பகுதி ஆகியவை பற்றி குழந்தைகளுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும்.

கலை.......அறிவூட்டும் நோக்கம் கொண்ட இந்த முயற்சியுடன் குழந்தையின் கண்பார்வை ஆய்வு ஆற்றல், நினைவுத் திறன், பேச்சுத் திறன், எடுத்துக்காட்டு ஆற்றல், புத்தாக்க திறமை ஆகியவை வெவ்வேறு அளவில் அதிகரிக்கலாம்.

ராஜா........ஆகவே. டிவி பார்ப்பது அன்றாட வாழ்க்கையில் சிறிய காரியம் அல்ல. இதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. நாம் சாதாரண வாழ்க்கையில் குழந்தையின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். உணவு உடை பிரச்சினையில் கவனம் செலுத்துவதை ம்க்கள் கைவிட மாட்டார்கள். ஆனால் நாகரிக பண்பிலும் மன வளர்ச்சியிலும் கவனிப்பது குறைவாகவே உள்ளது.

கலை.......ஆகவே நாம் குழந்தை பிறந்தவுடன் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைப் பருவத்தில் இருந்தே அவர்களுக்கு சீரான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்.