• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-02 10:23:41    
மாவ் நங் இன நடையுடைபாவனைகள்

cri

மலைகளிலிருந்து வெளியேறி சமவெளியில் குடியேறிய பிறகு, மாவ் நங் இன மக்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்படத் துவங்கியது. முன்பு, வெளியே போகாத மாவ் நங் இன மக்கள், வெளிப்புற உலகத்தைப் படிப்படியாக அறிந்து கொள்ளத் துவங்கினர். அன்றி, வெளிப்புற உலகம் அவர்களை ஈர்த்துள்ளது. அவர்கள், சீனாவின் தென் கிழக்குக் கடலோரத்தில் வளர்ச்சியடைந்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று பணிபுரியத் துவங்கினர். லு சியாங் பெயின் மகன் லு காங் அவர்களில் ஒருவராவார். 1990ம் ஆண்டு 20 வயதுக்குட்பட்ட லு காங், வெளிப்புற உலகத்தின் மீது அருமையான எதிர்பார்ப்புடன் ஒருவராக தென் கிழக்கு சீனாவின் Shen Zhen பொருளாதாரச்சிறப்பு பிரதேசத்துக்குச் சென்றார். அங்கு, தொழிற்சாலையில் வேலை செய்தார். உணவுவிடுதியில் சமையல்காரராக பணிபுரிந்தார். பின்னர், வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டார். சில ஆண்டுகளுக்குப் பின், அவர் ஊர் திரும்பி, ஏற்றியிறக்கல் அலுவல் புரியத் துவங்கினார். 

"இந்த ஏற்றியிறக்கல் பணியில் ஈடுபட விரும்புகின்றேன். எனது தம்பியும் Shen Zhen நகரில் இருக்கின்றார். அவரை ஊர் திரும்புமாறு சொல்லுவேன். என்னுடன் சேர்ந்து வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். எனது தமக்கையின் கணவர் வாகன பராமரிப்பில் ஈடுபடுகின்றார். முழுக் குடும்பத்தினர்களும் வாகனத்துடன் தொடர்புடைய பணியில் ஈடுபடுகின்றார்கள். இத்துறையில் மேலும் வளர்ச்சியடைய பாடுபடுவேன்" என்றார்.
Huan Jiang மாவட்டத்தில், லு காங் போன்று வெளியூர் சென்று வேலை செய்து விட்டு மீண்டும் ஊருக்கு வந்து புத்தாக்கப் பணி புரிவோர்களில் மாவ் நங் இனத்தவர்கள் குறைவல்ல. வெளியூரில் பணி புரிந்துள்ள அவர்கள் பணம் சேமித்துள்ளனர். மிக முக்கியமாக, அவர்கள் தொழில் நுட்பத்தைக் கற்றுத் தேர்ந்துள்ளனர். அவர்களின் சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது, இம்மாவட்டத்தில் 60 விழுக்காட்டுக்கு மேலான தொழில் நிறுவனங்கள், அவர்களால் நடத்தப்பட்டவை.

லு சியாங் பெய் மற்றும் அவரது மகன் லு காங்குடன் செய்தியாளர்கள் மகிழ்வுற உரையாடினார். இதற்கிடையில், லு ஜியே என்னும் இளைஞர், அதாவது, லு சியாங் பெயின் மருமகன் மலர்ந்த முகத்துடன் வந்தார். அவர் அவர்களின் குடும்பத்தின் முதலாவது பல்கலைக்கழக மாணவராவார். Huan Jiang மாவட்டத்தில் ஷாங்காய் மாநகரில் படித்துள்ள முதலாவது நபர், அவராவார். இப்போது அவர் Huan Jiang மாவட்ட அரசில் பணிபுரிகின்றார். ஷாங்காய் போன்ற இவ்வளவு பெரிய நகரில் பல்கலைக்கழகத்தில் படித்து விட்டு, ஏன், ஊர் திரும்பி பணி புரிய வேண்டும். இது போன்ற வினாவுக்கு லு ஜியே பதிலளித்ததாவது.

"என் கருத்தில் எங்கள் ஊர் மிகவும் வறுமையிலுள்ளது. நானும் ஒதுக்குப்புறத்தின் மலைப்பிரதேசத்திலிருந்து வெளியே வந்துள்ளேன். எனவே, வெளியூரில் பல்கலைக்கழகத்தில் அறிவைக் கற்றுக் கொண்டு ஊருக்குத் திரும்பி, கட்டுமானத்தில் ஈடுபட்டு. என்னால் இயன்ற அளவில் பாடுபட்டு, எனது ஊர் மேலும் விரைவாக வளர்ச்சியடையச் செய்திட வேண்டும் என்று அப்போது நான் நினைத்தேன். நான் மட்டுமல்ல, பெய்சிங் தியன் சின் ஆகிய மாநகரங்களில் படிக்கும் மாணவர்களுக்கும் இத்தகைய எண்ணம் உண்டு" என்றார், அவர்.

பண்டைக்காலம் தொட்டு, திறமைசாலிகளைப் பயிற்றுவிப்பதில் மாவ் நங் இன மக்கள் மிகுதியும் கவனம் செலுத்தியுள்ளனர். 2001ம் ஆண்டுக்கு பின், இம்மாவட்டத்தில் ஆண்டுதோறும் 4 நூறு அல்லது 5 நூறு மாவ் நங் இன மாணவர்கள், புகழ் பெற்ற சிங் ஹுவா பல்கலைக்கழகம், பெய்சிங் பல்கலைக்கழகம் உட்பட, உயர் கல்வி நிலையங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். படிப்பு முடிந்து, பலர் சொந்த ஊரான மாவட்டத்துக்குத் திரும்பி, தமது ஊரை நிர்மாணிக்கும் முதுகெலும்பாக பணி புரிகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் தமது ஊரில் ஏற்பட்ட வளர்ச்சியைக் கண்டு, அப்போதைய தமது தெரிவை மேலும் உறுதிப்படுத்தியதாக லு ஜியே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.