• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-12 14:19:15    
லாரியஸ் விருது

cri

உலகின் தலை சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கென வழங்கப்படும் லாரியஸ் விருது வருகின்ற ஏப்ரல் திங்கள் 2ம் நாள் பார்சலோனாவில் வழங்கப்படவுள்ளது. இதில் உலக தலைசிறந்த விளையாட்டு வீரர் விருதுக்கென தற்போது மூன்று நட்சத்திரங்களின் பெயர்கள் மூன்றாவது முறையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஃபார்முலா ஒன்று என்றழைக்கப்படும் கார் பந்தய உலக சாம்பியனாக 7 முறை வெற்றி கொண்ட மைக்கேல் ஷுமக்கார், ஃபெடரர் எக்ஸ்பிரெஸ் என்றழைக்கப்படும் டென்னிஸ் விளையாட்டின் ரோஜர் ஃபெடரர், கால்ப் விளையாட்டின் டைகர் வுட்ஸ் ஆகியோர் இம்முறை உலகின் தலை சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதை பெறுவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவருமே ஏற்கனவே இருமுறை இந்த விருதை பெற்றவர்கள். இவர்களில் யாராவது ஒருவர் இம்முறை வெற்றி பெற்றால் அது அவர்களின் மூன்றாவது லாரியஸ் உலகின் தலை சிறந்த விளையாட்டு வீரர் விருதாகும். பெண்கள் பிரிவில் டென்னிஸ் விளையாட்டின் பிரான்ஸ் நாட்டு நட்சத்திரம் அமேலி மௌரிஸ்மோ, ரஷ்யாவின் மரியா ஷரபோவா மற்றும் 2006ம் ஆண்டின் ஐரோப்பிய நீச்சல் போட்டிகளில் 4 தங்க பதக்கங்கள் வென்ற நீச்சல் விராங்கனை லௌரே மனாவ்தூ ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

128 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1068 பேர் கொண்ட ஊடகவியலாளர்கள் கொண்ட தேர்வுக்குழு இந்த 7 பிரிவுகளுக்கான லாரியஸ் விர்து பெறுவோரின் பெயர்களை பரிந்துரைக்கின்றனர். இதில் வெற்றி பெறுவோர் விளையாட்டு உலகின் சிறப்பு விருதாக மதிக்கப்படும் லாரியஸ் விருதை பெறுவார்.