• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-04 10:46:57    
சீனக் கதை

cri

ச்சி தேசத்து மன்னனுக்கு ஒரு சந்தேகம். தனது அரசவை ஓவியரை அழைத்தான்.

"ஐயா, ஓவியரே, நீங்க எத்தனையோ படங்களை வரைஞ்சிருக்கீங்க. எந்தப் படம் வரைவது கடினம்?"

"மன்னா, நாய், குதிரை இவற்றை வரைவதுதான் கஷ்டமானது."

"எந்த படத்தை மிக எளிதாக வரையலாம்?"

"சந்தேகமென்ன? பேய் படங்களை சுலபமா வரைந்து விடலாம்."

"என்னய்யா குழப்புகிறீரே. கண்ணால் பார்க்கிற விஷயங்களை—நாய், பூனை இவற்றை வரைவதுதானே சுலபமாக இருக்க வேண்டும். அரசே, நாய், பூனை, குதிரை இவற்றை தினந்தோறும் நீங்க பார்க்கிறீ்ங்க. எல்லோரும் பார்க்கிறாங்க. தப்பா வரைஞ்சிட்டா நீங்க நாலு கசையடி தருவீங்க. பேய் நீங்க பாத்திருக்கீங்களா?"

"இல்லை. இல்லவே இல்லை." என்று மன்னர் தலையாட்டினார்.

"ஆமாம் மன்னா, நானும் பேயைப் பார்த்தில்லே. அப்புறம் பேய்க்கு ஒரு வடிவம் கிடையாது. அது ஆவிதானே. அதனால் ஏதாவது ஒரு கோட்டைப் போட்டு இதுதான் பேய்னு நான் சொன்னா நீங்க நம்பித்தானே ஆகனும்."

ஜெங் நகரத்தில் வசித்த ஒரு மனிதர் ஒருநாள் தமக்கு தோல் காலணி வாங்க கடைக்குப் போனார். போவதற்கு முன் பாதத்தை ஒரு தாளில் வரைந்து அளவெடுத்தார். ஆனால், போகும் அவசரத்தில் அந்தத் தாளை எடுத்துப் போக மறந்துவிட்டார்.

கடைக்குப் போய் காலணியை தெரிவு செய்த பிறகு, அது தனது காலுக்குப் பொருந்துமா என தெரியவில்லை. உடனே வீட்டுக்குத் திரும்பினார்—பாதத்தின் அளவு வரையப்பட்ட தாளை எடுப்பதற்காக.

அவர் திரும்பி வருவதற்குள் கடை காலியாசிவிட்டது. எல்லா காலணிகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. அப்போது கடையில் இருந்த பணியாள் கேட்டான்.

"ஐயா, நீங்க செருப்பை எடுத்ததுமே உங்க காலியே மாட்டி அளவு பார்த்திருக்கலாமே."

"தம்பி, நான் என்னையே நம்ப மாட்டேன். நான் எடுத்த அளவைத் தாள் நம்புவேன்."
கன்பூசியஸ் ஒரு தடவை தமது சீடர்களுடன் சென்று கொண்டிருந்த போது, அவருடைய குதிரை சாலையில் இருந்து விலகி, பக்கத்தில் இருந்த வயலில் விளைந்த பயிரை மேய்ந்து விட்டது. அந்த வயலின் விவசாயி குதிரையைப் பிடித்து வைத்துக் கொண்டு தர மறுத்து விட்டான்.

1 2