• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-06 09:19:43    
சோப்பு 6

cri

மகள் சாவோ சூப்கிண்ணத்தை தட்டிவிட்டாள். ஸுமின் தனது இடுங்கிய இயன்றமட்டிலும் அகலவிரித்து முறைத்தார். அவள் அழுதுவிடுவாள் என்று தோன்றிய மோதுதான் முறைப்பதை நிறுத்திவிட்டு, தனது சாப்ஸ்டிக்கை எடுத்தார். நன்றாக வெந்த கேபேஜ் துண்டைப் பற்றியெடுக்க முற்பட்ட போது, அது திடீரென மறைந்துவிட்டது. வலமும் இடமும் பார்த்தார். பெரிதாக விரிந்த வாய்க்குள் அதைத் திணித்துக் கொண்டிருந்தான் ஸுவே செங் ஏமாந்து போய், வெறும் மஞ்சள் இலைகளை தனது வாய்க்குள் அடைத்துக் கொண்டார்.

"ஸுவே செங்..." மகனைப் பார்த்துக் கேட்டார், "அந்த வார்த்தைக்கு அர்த்தம் கண்டு பிடிச்சியா, இல்லியா?"

"எந்த வார்த்தை? இல்லே, இன்னும் இல்லே."

"ப்பூ...! மூஞ்சியப்பாரு. நீ எல்லாம் என்ன படிக்கிற? புத்தியே இல்லே. திங்கத்தான் தெரியும். அந்த பொண்ணைப்பாரு. பிச்சைக்காரிதான். ஆனாலும் தன்னோட பாட்டியை எவ்வளவு மரியாதையா நடத்துறா? தான் பட்டினி கிடந்து அவளைக் கவனிக்கிறா... வங்களைப் போல படிச்ச முட்டாள்களுக்கு இதெல்லாம் தெரியுமா? கீழ்த்தரமாத்தான் வளருவே..."

"ஒரு அர்த்தம் பத்தி யோசிச்சேன். ஆனா அது சரியான்னு தெரியாது. ஒரு வேளை ஓ...டு...பு...லா என்று அவங்க சொல்லியிருக்கலாம். கிழட்டு முட்டாள் என்று பொருள்."

"அதான் அதுவேதான். ஓ டு பு லான்னுதான் எனக்குக் கேட்டது. அப்படின்னா என்ன அர்த்தம்? நீ அந்த வயசுக்காரன்தானே! உனக்குத் தெரிஞ்சிருக்கணுமே!"

"அர்த்தம். என்ன அர்த்தம்று எனக்கு சரியாத் தெரியலே!"

1 2