• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-06 14:39:27    
பான் சாங் மாவட்டத்தின் தொழில் துறை வளர்ச்சி

cri

வேளாண் உற்பத்தி, சீனாவின் மத்திய பகுதியிலுள்ள ஆன் ஹுய் மாநிலத்தின் ஆதார தூண் தொழிலாகும். இம்மாநிலத்தின் 70 விழுக்காட்டு மக்கள் கிராமங்களில் வசிக்கின்றனர். வேளாண் தொழிலின் விகிதாச்சாரம், பொருளாதாரத்தில் சுமார் 50 விழுக்காடு வகிக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில், இங்குள்ள சில கிராமங்கள், ஆடை, காலணி தயாரிப்பு உள்ளிட்ட மென்ரகத் தொழில் திட்டப்பணிகளை வளர்க்கத் துவங்கியுள்ளன. உள்ளூர் விவசாயிகள் வேளாண் உற்பத்தியில் ஈடுபடுவதிலிருந்து தொழில் நிறுவனங்களில் வேலை செய்வதற்கு மாறி வருகின்றனர். அவர்கள் வருமானம் முன்பை விட மேலும் உறுதியாக உள்ளது. ஓய்வு நேரத்தில் அவர்களின் பண்பாட்டு வாழ்க்கையும் மேலும் செழிப்பாகியுள்ளது.

பான் சாங் மாவட்டத்தின் ஸுன் சுன் வட்டத்திலுள்ள ஒரு விவசாயியின் வீட்டுக்கு எமது செய்தியாளர் சென்றார். இந்த அழகான இரண்டு மாடி கட்டிடத்தில், முதல் மாடியில், ஒரு சமையலறை, ஒரு கழிப்பறை, ஒரு வரவேற்பறை இரண்டு படுக்கையறைகள் உள்ளன. இரண்டாவது மாடியில், 3 பெரிய படுக்கையறைகள் உள்ளன. இந்த அறைகளில் வீட்டுச் சாமான்களும் வீட்டுச் சாதனப் பயன்பாட்டு மின் சாதன வசதிகளும் முழுமையானவை. எமது செய்தியாளரின் கண்களில், இந்த வீடு, கிராமப்புற மாளிகையாக தெரிந்தது.

பான் சாங் மாவட்டத்தின் மக்கள்

59 வயதான ஜியாங் துங் மிங், இவ்வீட்டின் தலைவர் மனைவி, கடைசி மகள், மருமகன் ஆகியோருடன் அவர் வாழ்கிறார். இக்குடும்பத்தின் வேளாண் உற்பத்தி, குடும்பத்தினரின் உணவுத் தேவையை நிறைவு செய்த பின், விற்பனைக்கு மிஞ்சிய தானியம் அதிகமில்லை. ஆனால், ஜியாங் குடும்பத்தின் கட்டிடம் எப்படி கட்டப்பட்டது? இதற்குக் காரணம் பற்றி ஜியாங் துங் மிங் சிரிப்புடன் கூறியதாவது—

"இந்தக் கட்டிடம் 2004ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சேமிப்புத் தொகை செலவிடப்பட்டது என்ற போதிலும், என் மகளும் மருமகனும் வேலை செய்து ஊதியம் ஈட்டுகின்றனர்" என்றார் அவர்.

வேலை செய்வது, பாரம்பரிய விவசாயிகளுக்கு பரிச்சயம் இல்லை. ஆனால் தற்போது பான் சாங் மாவட்டத்தில், இது ஓன்றும் புதிதல்ல. ஜியாங் குடும்பம் அமைந்துள்ள ஸுன் சுன் வட்டத்தில், ஆடை முறைவழியாக்கத்தை முக்கியமாகக் கொண்ட 270க்கு அதிகமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. மக்கள் தொகை 60 ஆயிரத்துக்குட்பட்ட இந்தச் சிறு வட்டத்துக்கு சுமார் 20 ஆயிரம் வேலை வாய்ப்புகளை அவை வழங்கியுள்ளன. எனவே, உள்ளூர் விவசாயிகளைப் பொறுத்த வரை, பயிர் செய்கை, வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறை அல்ல.

1 2