• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-08 20:40:09    
சீனாவின் உயிரினப் பாதுகாப்பு பிரதேசங்கள்

cri
1980ம் ஆண்டு மார்ச் 27ம் நாள் CHANG BAI SHAN,WO LONG,DING HU SHAN ஆகியவை, சர்வதேச உயிரினப் பாதுகாப்பு பிரதேசத்தில் சேர்க்கப்பட்டன.

JI LIN மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள CHANG BAI SHAN மலை, மிக உயரமாக கடல் மட்டத்திலிருந்து 2749 மீட்டர் உயரத்தில் உள்ளது. இம்மலையின் அடிவாரத்திலிருந்து மலை உச்சி வரை, மிதமான தட்ப வெப்ப மண்டலத்திலிருந்து குளிர் தட்ப வெப்ப மண்டலம் வரையான பல்வகை தாவரங்களைக் காணலாம். செடிகொடிகளின் பரவல் நிலை மிகவும் தெள்ளத்தெளிவானது. மலை அடிவாரத்தில் முக்கியமாக பெரிய இலை கொண்ட மரங்கள் வளர்கின்றன. கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரத்திலுள்ள பகுதிகளில் பெரிய இலைகள் கொண்ட மரங்கள் மற்றும் ஊசி இலை மரங்கள் ஒருங்கிணைந்த கலப்பு காடு உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர்-1800 மீட்டர் உயரத்தில் உள்ள பகுதிகளில் ஊசி இலை மரங்கள் நிறைந்த காட்டைக் காணலாம். கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டருக்கு மேற்பட்ட இடத்தில் மரங்கள் காணாமல் வெட்ட வெளிப்பகுதி மட்டமே காண முடியும்.

WO LONG,இயற்கை புகலிடம், வென் சுவான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக 52 கிலோமீட்டர் நீளமும் தெற்கு வடக்காக 62 கிலோமீட்டர் அகலமும் உடைய இப்புகலிடத்தின் நிலப்பரப்பு, 70 ஹேக்டராகும். இப்புகலிடத்தில் மூவாயிரம் நாலாயிரம் வகைச் செடி கொடிகள் வளர்கின்றன. 50 வகை வன விலங்குகளும், 300 வகை பறவைகளும் உள்ளன. இவற்றில் 29 வகைகள் நாட்டின் பாதுகாப்புக்குரிய விலங்குகளைச் சேர்ந்தவை. இப்புகலிடம் சீனா மிகவும் முன்னதாக உருவாக்கிய புகலிடங்களில் ஒன்றாகும். 1975ம் ஆண்டு அரசு நிலை இயற்கை புகலிடம் என அது அங்கிராரம் பெற்றது. அதன் பரப்பளவு, 20 ஆயிரம் ஹேக்டரிலிருந்து 2 லட்சம் ஹேக்டராக விரிவடைந்துள்ளது. இது சீனாவின் மிகப் பெரிய ராட்சத பண்டாவின் புகலிடமாகும். 1980ல், அது, உலகமனிதர் மற்றும் உயிரினங்கள் பாதுகாப்பு வலைப்பின்னலில் சேர்ந்தது. அத்துடன் உலகில் ஒரே ஒரு நாட்சத பண்டாவின் ஆய்வு மையம், இங்கு உருவாக்கப்பட்டடுள்ளது.

DING HU மலை இயற்கை புகலிடம் குவாங் துங் மாநிலத்தின் ZHAO QING நகரின் வடகிழக்கு புறநகரில் அமைந்துள்ளது. இது, தென்னாசிய வெப்ப மம்டல மலை மற்றும் குன்று பிரதேசத்தைச் சார்ந்தது. இது, சீனாவின் புகழ்மிக்க இயற்கை பாதுகாப்பு புகலிடம் மற்றும் சுற்றுலாக் காட்சிப்பிரதேசமாகும். அதன் மொத்த நிலைப்பரப்பு, 17 ஆயிரம் மோவாகும். இப்புகலிடத்தில் பெரிய இலைகள் கொண்ட மரங்கள் நிறைந்த பழம் பெரும் காடுகள் உள்ளன. அது, 400 ஆண்டுகளுக்கு முந்தையது. அது வன விலங்குகளுக்கு சிறப்பான வாழ்க்கை வசதிகளை வழங்கியுள்ளது. விலங்கு உலகின் நாஜியம் என்று அழைக்கப்படுகிறது.