• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-08 14:50:51    
எது முக்கியம்? குறியா? ஆபத்தா?

cri

வு தேசத்து மன்னன் அண்டையில் உள்ள சு தேசத்தின் மீது படையெடுக்கத் திட்டம் போட்டான். "நான் ஒரு முடிவு எடுத்துட்டா அதை மாற்ற முடியாது. யாராவது தடுத்தால் மரண தண்டனை தான்" என்று அரசவையிலே எச்சரித்தான்.

மன்னனின் இந்தப் போக்கு ஒரு இளம் அமைச்சருக்குப் பிடிக்கவில்லை. மன்னரின் பிடிவாதத்தை எப்படி மாற்றுவது என்று யோசித்தார். கடைசியில் காலை நேரத்தில் கையில் கவணுடனும், கூழாங் கற்களுடனும் அரண்மனைக்குப் பின்னால் உள்ள தோட்டத்திற்குப் போய் ஒரு மரத்தடியில் நின்றார்.

பனி தொட்டியது. அவருடைய உடைகள் நனைந்தன. தொடர்ந்து மூன்று நாம்கள் இவ்வாறு செய்து கொண்டிருந்தார். மூன்றாவது நாள் மன்னன் பார்த்துவிட்டான்.

"யாருப்பா அது? கொட்டுற பனியில தோட்டத்துல என்ன செய்றே! உடம்புக்கு வந்தா என்னாவது? உள்ளே போ!" என்றான்.

"மன்னரே, தோட்டத்திலே ஒரு மரம் இருக்குது. அந்த மரத்தின் ஒரு கொப்பிலே மைனா உக்கார்ந்துக்கிட்டு இலைகளில் உள்ள பனி நீரை குடிச்சி கீச்கீச்னு கத்தது. ஆனா பக்கத்துல மொந்துக்குள்ளே இருக்கற ஆந்தை அதன் கண்ணுக்குத் தெரியலே.

ஆந்தையோ, இந்த மைனாவை ஒரே போடா போட்டுறணும்னு நேரம் பார்த்து காத்துக்கிட்டிருக்கு. ஆனா ஆந்தை இருக்கற மொந்துக்கு அருகிலே ஒரு மரங்கொத்தி எப்போ ஆந்தை வெளியே வரும்? ஒரே கொத்து கொத்திரலாம்னு எதிர்பார்த்துக் கிட்டிருக்கு. ஆனால் அந்த மரங்கொத்திக்கு நான் கையில கவணோட அதைக் குறிபார்க்கறது. தெரியலே. இப்படி ஒவ்வொருத்தருக்கும் தங்களோட குறிதான் முக்கியமாய்படுது. அடுத்து என்ன ஆபத்து வரும் என்பது தெரியலை" என்றார்.

இதைக் கேட்டதும் மன்னன் படடையெடுக்கும் திட்டத்தைக் கைவிட்டான்.