• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-10 18:00:08    
காலையில் மூன்று மாலையில் நான்கு

cri

சுங் என்ற நாட்டில் வாழ்ந்த் வந்தார் ஒருவர். அவர் குறங்குகளை வளர்த்து வந்தார். குரங்குகளை அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார். குரங்குகளும் அவரை நன்றாக புரிந்து வைத்திருந்தன. இந்த மனிதர் எந்த அளவுக்கு தான் வளர்த்த குரங்குகளை நேசித்தார் என்றால், குரங்குகளுக்கு உணவில்லாமல் போகக்கூடாது என்பதற்காக தனது குடும்பத்தினருக்கு தேவையான உணவுப் பொருட்களின் அளவையே குறைத்தவர்.

இப்படியே சில காலம் கழிந்தது. அவரது குடும்பத்தினர் தேவைக்கு அதிகமில்லாத உணவுப்பொருட்களோடு சமாளித்து, பின் தேவைக்கு குறைவான அளவையும் கொண்டு சமாளித்து ஒரு நாள் சாப்பிட ஒன்றுமே இல்லாமல் போகும் நிலை ஏற்பட, மனிதருக்கு விழிபிதுங்கியது. தான் ஆசையாக வளர்த்த குரங்குகளுக்கு குறையாமல் அளிக்கும் வழக்கத்தை கொஞ்சம் மாற்றினால்தான் தன் குடும்பத்தினரின் பசியாறும் என்ற நிலையில், குரங்குகளுக்கான உணவு அளவை கட்டுப்படுத்த விரும்பினார்.

ஆனால் குரங்குகள் இதைக் கண்டு கோபமடைந்து தன் சொல்லை மதிகாது போனால்? எனவே நன்கு யோசித்தபின் ஒரு நல்ல திட்டத்தோடு குரங்குகளிடம் சென்றார். இனிமேல் உங்களுக்கு காலையில் 3 பலாக்கொட்டைகளையும், மாலையில் 4 பலாக்கொட்டைகளையும் தருவேன், என்ன சம்மதம் தானே> என்று கேட்டார்.

குரங்குகள் கோபமடைந்தன. சிறிது நேரம் கழித்து, சரி சரி, நான் காலையில் 4 பலாக்கொட்டைகளை தருகிறேன், மாலையில் 3 பலாக்கொட்டைகள் தருகிறேன் என்றார். குரங்குகள் அடடே காலையில் ஒன்று அதிகமாக கிடைக்கிறது என்ற மகிழ்ச்சியில் பல்லிளித்தன. குரங்குகளை அழகா தன் திட்டத்திற்கு இணங்கச்செய்த அந்த நபருக்கு உண்மையிலேயே, குரங்குகளை எப்படி வழ்கிக்கு கொண்டு வரவேண்டும் என்று தெரிந்துள்ளது. அல்லவா?