• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-12 15:50:14    
"அதிர்ஷிடம் பெய்ஜிங்" என்ற தொடர்ப் போட்டி

cri

3 நாள் நீடித்த, "அதிர்ஷிடம் பெய்ஜிங்" என்ற மிதிவண்டி போட்டி உலக கோப்பை, 9ம் நாள் பெய்ஜிங்கில் முடிவடைந்தது. நெதர்லாந்து அணி, 4 தங்கப்பதக்கங்களையும், 2 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று, பதக்கப் பட்டியலில் முதலிடம் வகித்தது. சீன அணி, 2 வெண்கலப் பத்தகங்களை பெற்றது. ஆடவர் 1 கிலோமீட்டர் நேர அளவு விரைவுப் போட்டியில், சீன வீரர் li wen hao வெண்கலப் பத்தகத்தை பெற்றார். மகளிர் குழு போட்டியில் சீன அணி, வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச்சென்றது. இப்போட்டி, 7ம் நாள் துவங்கியது. 47 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 390 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.

3 நாள் நீடித்த "அதிர்ஷிடம் பெய்ஜிங்" என்ற மிதிவண்டி போட்டி கலை நய ஜிம்னாஸ்டிக் போட்டி, 7ம் நாள் பெய்ஜிங்கில் முடிவடைந்தது. ரஷிய அணி, தனி நபர் பன்முக போட்டி மற்றும் குழு பன்முக போட்டியின் தங்கப்பதக்கங்களை பெற்றது. சீன அணி, குழு பன்முக போட்டியின் வெண்கல பத்தகத்தை தட்டிச்சென்றது.

5 நாட்கள் நீடித்த 2007ம் ஆண்டு ரஷிய பூப்பந்து போட்டி, உள்ளூர் நேரப்படி 9ம் நாளிரவு நிறைவடைந்தது. 5 போட்டிகளில், சீன வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், 3 தங்கப்பதக்கங்களை பெற்றனர். இளம் வீரர் lv yiயும் வீராங்கனை wang yi hanனும், ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் போட்டிகளில் சாம்பியன் பட்டங்களை பெற்றனர்.
மகளிர் இரட்டையர் போட்டியில், சீன இணை du jing/yu yang, சீன தைபெய் இணையை தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை பெற்றது.

கலப்பு இரட்டையர் போட்டியில் சீன இணை he han bin/yu yang, போலந்து இணையிடம் தோல்வியடைந்து, வெள்ளிப் பதக்கத்தை பெற்றது.
டிசெம்பர் 2ம் நாள் ஹாங்காங் பூப்பந்து போட்டியின் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டிகள் முடிவடைந்தன.
பிரபல சீன வீரர் lin dan 2-1 என்ற ஆட்டக் கணக்கில் மலேசிய வீரர் LEE Chong Weiயை தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை பெற்றார். அவர் காதலியான xie xing fang, மகளிர் ஒற்றையர் போட்டியில் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.