• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-05 14:26:54    
தா குவான் யுவான்

cri

பெய்ஜிங்கிலுள்ள தா குவான் யுவான், Red Dream எனும் நூலில் வர்ணிக்கப்பட்டத்தின்படி கட்டியமைக்கப்பட்ட பழங்கால தோட்டக் கலையாகும். தனது பழங்கால பண்பாட்டுச் சிறப்பால், பெய்ஜிங்கில் புதிய 16 காட்சிகளில் ஒன்றாக இது மாறியுள்ள அதே வேளையில், சீன 40 சுற்றுலா இடங்களில் ஒன்றாக இருக்கிறது.

தா குவான் யுவான், யொ ஆன் மென் வாயிலின் மேற்குப் பகுதியிலுள்ள ஆற்றுங்கரையில் அமைந்திருக்கிறது. முன்பு, இது, அரச குடும்பத்தின் காய் விளையும் தோட்டமாக இருந்ததால், தென் காய்கறித் தோட்டம் என அழைக்கப்பட்டது. 1984ம் ஆண்டு, நமது நாட்டுப் பழங்கால நூலிலுள்ள தா குவான் யுவானுக்கான விவரிப்பின் மாதிரியாக, இது கட்டியமைக்கப்பட்டுள்ளது. 1988ம் ஆண்டு, அமைத்து முடிந்தனர். இதன் பரப்பளவு சுமார் 13 ஹெக்டர் ஆகும். ஏரியின் பரப்பளவு, சுமார் 3 ஹெக்டராகும். தோட்டத்தில், பெரிய மற்றும் சிறிய காட்சித்தலங்களின் எண்ணிக்கை, 40க்கும் மேலாகும். அவற்றில், ச்சியா பௌ யூ முற்றம், லீன் தய் யூ அரங்கம் முதலியவை இருக்கின்றன. இயற்கைக் காட்சித்தலங்களில், இந்நூலில் வர்ணிக்கப்பட்ட பல புகழ்பெற்ற காட்சிகள் இருக்கின்றன.

மண்டபக் காட்சித்தலங்களில், கு யேன் சி யீ மண்டபம் மற்றும் தா குவான் மாளிகைகள் அமைந்துள்ளன. இம்மாளிகைகள், ச்சியா யுவானின் இளவரசி தன் பெற்றோரைப் பார்க்கும் போது தங்கிய வீடுகள் ஆகும். தோட்டத்தின் முழு வடிவமைப்பு, நேர்த்தியாக காணப்படுகிறது. நம் நாட்டின் பழங்கால கட்டிடங்களின் தலைசிறந்த தன்மையை, இது காட்டுகிறது. தற்போது, தோட்டத்தில், 12 காட்சி மண்டபங்கள் இருக்கின்றன. அவற்றில், சுமார் பத்தாயிரம் அரிய கைவினை பொருட்கள், வீட்டு சாமான்கள் முதலிய தொல்பொருட்கள் இருக்கின்றன.

ல ஆண்டுகளில், தா குவான் யுவான், தன் தோட்டக் கலையின் செயல்திறனை வெளிக்கொணர்ந்ததோடு, அதற்கான தனித்தன்மை மிகுந்த பண்பாட்டில் உயர்ந்துள்ளது. இது, ஆழமான உயர்ந்த பண்பாட்டைக் காட்டுகிறது. பல்வேறு பொருட்கள் மற்றும் தகவல்கள் மூலம், மக்களுக்கு முறையாகவும் உணர்வு பூர்வமாகவும் ஹொங் லொ மெங் பற்றிய ஆழமான, செழிப்பான பண்பாட்டை இது அறிமுகப்படுத்தி வருகிறது.