• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-03 10:02:25    
சீனாவின் நூல் பதிப்புரிமை வர்த்தகம்

cri

அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்ற நூல் முன்பதிவு கூட்டத்தில் 2008ம் ஆண்டு தேசிய படைப்புகளுக்கான பதிப்புரிமை வர்த்தக பொருட்காட்சி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நடவடிக்கை, சீன மற்றும் வெளிநாட்டு வெளியீட்டகங்களுக்கு நல்லதொரு வர்த்தக வாய்ப்பை வழங்கியது. இதனை பொறுப்பாக ஏற்பாடு செய்த சீன பதிப்புரிமை தலைமை நிறுவனத்துடனும், தொடர்புடைய உள் நாட்டு நிறுவனங்களுடன் பல ஒத்துழைப்பு செயல்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. பதிப்புரிமை வர்த்தகத்திற்கு கையொப்பமிடும் விழாவும் நடைபெற்றது.


ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பெய்ஜிங் நூல் முன்பதிவு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், பதிப்புரிமை வர்த்தகத்திற்கு கையொப்பமிடும் நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமாக நடைபெற்றன. சீன மற்றும் உலகின் பல்வேறு பிரதேசங்களின் பதிப்புரிமை நிறுவனங்களும், வெளியீட்டகங்களும், திரைப்பட மற்றும் தொலைகாட்சித் தயாரிப்பு நிறுவனங்களும் இதில் கலந்துகொண்டன.


தற்போது, சீன மற்றும் வெளிநாட்டு பதிப்புரிமை வர்த்தக சட்ட அமைப்பு முழுமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன் மூலம், சீன மற்றும் வெளிநாட்டு பதிப்புரிமை வர்த்தகம் வளர்ச்சியடைகிறது. 1990ம் ஆண்டு, சீன மக்கள் குடியரசின் முதலாவது பதிப்புரிமைச் சட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு, 1991ம் ஆண்டு ஜூன் திங்கள் 1ம் நாள் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1992ம் ஆண்டு, சர்வதேச பொது ஒப்பந்தத்தில் சீனா சேர்ந்தது. உள் நாட்டு மற்றும் சர்வதேச பொது ஒப்பந்தம், பதிப்புரிமை வர்த்தகச் சட்டத்தின் அடிப்படையாகும் என்று சீனத் தேசிய பதிப்புரிமை ஆணையத்தின் நிர்வாகப் பிரிவுப் பிரசார அலுவலகத்தின் தலைவர் duanyuping தெரிவித்தார்.

நண்பர்களே, சீனாவின் நூல் பதிப்புரிமை வர்த்தகம் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.