• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-03 09:47:18    
உயிர்காக்கும் கொசு ஒழிப்பு

cri
நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம். நோய் என்று சொன்னாலே அனைவருக்கும் பயம். நோய் தடுப்பே மிக முக்கியமானது என்று எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். மருத்துவ துறையில் புதுவித மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதற்கு போட்டிபோட்டு கொண்டு புது நோய்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. நோய்களை உண்டாக்கும் நச்சு நுண்ணுயிரிகள் காலத்திற்கும், அறிவியல் முன்னேற்றத்திற்கும் ஏற்றாற்போல் வளர்ந்து, வீரியம் பெற்று வித்தியாசமான நிலையில் வெளிப்படுவது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. இன்று உலகில் மிக விரைவாக பரவுவது தகவல் மட்டுமல்ல, நோய்களும் தான். இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஒரு வகை காய்ச்சல் மக்களிடம் பரவி பலரை ஆட்டிபடைத்தது. தொடக்கத்தில் காய்ச்சல் தானே என்று சாதாரணமாக நினைத்தவர்கள் கடுமையான பாதிப்புகளை கண்டு அச்சமடைய தொடங்கினர். அது தான் சிக்குன்குனியா நோயாகும்.


"சிக்குன் குனியா, அதிக குழப்பத்தை கொண்டு வருவதோடு எதிர்பாராத, சமாளிக்க முடியாத சூழலையையும் உருவாக்குகிறது. ஒரே நேரத்தில் பல்லாயிரகணக்கான மக்களுக்கு தேவைப்படும் மருத்துவ சேவையை கொடுக்க முடியாத நிலையை இது உருவாக்கும் என்று இந்நோயின் எதிர்பாராத விளைவுகளை விளக்குகிறார் ஜெனீவா சுகாதார அமைப்பின் கொசு-எலும்பு நோய் மருத்துவ நிபுணர் மைக்கேல் நாதன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது தான் அது என நினைக்கிறீர்களா? இல்லை. அதற்கு நீண்டகால வரலாறு உண்டு. 1950 களில் தான்சானியாவில் சிக்குன் குனியா முதலாவது பரவியது. 1960 களில் ஆசியா மற்றும் ஆப்பிக்காவில் சில காலம் பாதிப்புகளை ஏற்படுத்தியது. 2005 ஆம் ஆண்டு இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள ரியூனியன் தீவில் 75 விழுக்காட்டினர் சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டனர். 2006 ஆம் ஆண்டு சிக்குன் குனியா இந்தியாவில் விரைவான பாதிப்பு ஏற்படுத்தி சுகாதார அதிகாரிகளை நிலைகுலைய செய்தது. 2007 ஆம் ஆண்டில் வட இத்தாலியில் ஏறக்குறைய 300 பேர் பாதிக்கப்பட்டனர். இவ்வாண்டு ஜனவரி பாதியில் முதல் முறையாக 8 பேர் சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் தெரிவித்தது. இந்தோனேஷியாவில் பரவிய இந்நோய், கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சீன தைவான் பிரதேசத்திலும் மூன்று பேர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தெரியவந்தது. இந்தோனேஷியாவிலிருந்து தைவான் பயணம் செய்தவர்கள் மூலமாக இது பரவியுள்ளது.


இந்த நோய் எப்படி இவ்வளவு விரைவாக பரவுகிறது என்பதை ஆய்வு செய்த போது வியக்கதக்க மற்றும் நாம் மேலும் எச்சரிக்கை கொள்ளக்கூடிய அளவிலான நிலைகளை கண்டுபிடிக்க முடிந்தது. ரியூனியன் தீவில் மக்கள் பலர் பாதிக்கப்பட்டபோது தான் கொசுக்களின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு புலி வகை கொசுக்களால் சிக்குன் குனியா நோய் எளிதாக பரவும் நிலை ஏற்பட்டது என்று டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அதற்கு முன்னால் மஞ்சள் காமாலை நோயை பரவச்செய்யும் கொசுக்கள் தான் இதனை பரப்பி வந்தன. புலி வகை கொசுக்கள் குளிரான காலநிலையிலும் வாழக்கூடிய திறன் கெண்டவை. எனவே இது ஆசியாவில் பரவுவதோடு மேலதிக நாடுகளுக்கு பரவி ஐரோப்பியா, அமெரிக்க முதலிய நாடுகளிலும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டவர் பயணம் செய்கின்ற போது அப்பகுதியிலுள்ள புலி வகை கொசுக்களால் இந்நோய் பரவல் ஏதுவாகிவிடுகிறது. இக்காலகட்டத்தில் சர்வதேச பயணம் எளிதாகவும், விரைவாகவும் இருப்பதால் இந்நோய் எளிதாக பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.


காலநிலை மாற்றம் கூட இவ்வகை நச்சுயிரிகள் பரவ காரணமாகின்றன என்று சுகாதார நிபுணர்கள் எண்ணுகிறார்கள். உலக வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க முன்பு குளிர்காலங்களில் மட்டுமே உற்பத்தியான மலேரியா, டெங்கு காய்ச்சல் ஆகியவற்றை பரப்பும் நச்சுயிரிகள் தற்போது வெப்பமான நிலையிலும் வளர்கின்றன. வெப்பமான வானிலை கொசுக்களின் வாழ்நாளை குறைத்தாலும், ஒரு வாரத்தில் உருவாகும் அதன் எண்ணிக்கையை இரண்டு மடங்காக்கியுள்ளது. முதிர்வதற்கு குறைந்த காலமே தேவைப்படுவதால் அதிக கொசுக்கள் உருவாகி அவை தங்களது இனப்பெருக்கத்திற்கு தேவையான இரத்தத்தை உடனே தேடிக்கொள்கின்றன என்று இந்தோனேஷிய சுகாதார பணியக மிருக-எலும்பு நோய் பிரிவு இயக்குனர் எர்னா டிரிஸ்னானிங்சிகா தெரிவிக்கிறார்.


இந்நிலையில் சிக்குன் குனியா நச்சுயிரியால் பாதிக்கப்பட்ட சோதனை எலி மாதிரியை ஆய்வாளர்கள் முதலாவதாக உருவாக்கியுள்ளனர். சோதனை எலிகளை பயன்படுத்தி அவைகளின் தசைகளையும், உயிரணுக்களையும் மிதமான மற்றும் தீவிர நோய் நச்சுயிரிகளால் பாதிப்படைய செய்துள்ளனர். இவ்வாய்வை பிரான்ஸ் தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆய்வு நிறுவனமும், உயிரியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் பாஸ்டியூர் நிலையமும் மேற்கொண்டுள்ளன. அனைத்து கண்டுபிடிப்பின் முடிவுகளும் கடந்த மாத "பொது அறிவியலின் நூலகம்" என்ற இதழில் வெளியானது.


இந்நோய் ஏற்படுத்தும் காய்ச்சல், மூட்டு மற்றும் தசை வலி, தோலில் இரத்தநிற வீக்கம் ஆகியவை மருத்துவ துறை மற்றும் பொது மக்களுக்கு தெரிந்தவை. அதனால் ஏற்படும் உடல் ரீதியாக தொடரும் பாதிப்புகள் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. பிறந்த குழந்தைகள் மற்றும் முதியோர்களிடத்தில் அதிகமாக காணப்படுகின்ற நரம்பியல் தொடர்புடைய பிரச்சனைகள் இதனால் உருவாக்கப் படுகின்றவையே. சிக்குன் குனியா நச்சுயிரி பாதிப்பு ஈரலில் ஏற்பட்டவுடன் மூட்டு, தசை மற்றும் தோலுக்கு அவை பரவி மத்திய நரம்பு மண்டலத்தையும் தாக்குகிறது. சிக்குன் குனியா உயிர் கொல்லி நோயல்ல என்றாலும் உடலுக்குள் இரத்த கசிவை ஏற்படுத்தி சாவை உருவாக்கும் அபாயத்தை கொண்டுள்ளதால் டெங்கு காய்ச்சலை விட சிக்குன் குனியா அபாயகரமானதாக கருதப்படுகிறது.
சிக்குன் குனியா நச்சுயிரியால் தாக்கப்பட்ட சோதனை எலி மாதிரியை உருவாக்கியுள்ளது, உடல் ரீதியான நோய் பரவல் மற்றும் பிறருக்கு தொற்றுகின்ற நிலைகள் பற்றிய தெளிவுகளை ஆய்வாளர்களுக்கு அளிக்கவுள்ளது. இது வல்வகை சிகிச்சைகளுக்கும், தடுப்பு முறைகளுக்கும் திறப்பை உருவாக்கியுள்ளது. எப்போதாவது கொசுக்களால் மலேரியா வரும் என்று தானே நாம் அறிவோம். இதுவரை இந்நோய் தடுப்பிற்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது நாம் கொண்டுள்ள கொசு ஒழிப்பு உத்திகள் கொசுக்களிடமிருந்து நம்மை பாதுகாக்கின்றவே ஒழிய அவற்றை முழுவதுமாக ஒழித்து அழிப்பதில்லை. கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்காணிக்கப்பட்டு அவற்றின் உற்பத்தி குறைக்கப்டுவதும் மகிவும் முக்கியமானது. சொசு ஒழிப்பு என்பது உயிர் காப்புக்கு சமம் என்பது தெளிவாகிறதல்லவா!