• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-03 09:00:55    
கிழக்காசிய கால்பந்து போட்டி

cri
2008ம் ஆண்டு கிழக்காசிய கால்பந்து போட்டியின் மகளிர் பிரிவு ஆட்டம் நேற்று சீன தென்மேற்கு பகுதியின் yong chuan நகரில் முடிவடைந்தது.
இதில், சீன மகளிர் அணி, 0-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல்வியடைந்து, தரவரிசையில் 3வது இடத்தை வகித்தது. ஜப்பான் வட கொரிய அணிகள், முதல் 2 இடங்களை பெற்றன. 23ம் நாள் முடிவடைந்த ஆடவர் போட்டியில், சீன அணி, 3-1 என்ற கோல் கணக்கில் வட கொரியாவை தோற்கடித்து, 3வது இடத்தையும் வகித்தது. தென்கொரியா ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் 2 இடங்களை பெற்றன.

சர்வதேச பூப்பந்து கூட்டமைப்பு 21ம் நாள் புதிய உலக தரவரிசையை வெளியிட்டுள்ளது. சீன வீரர்களும் வீராங்கனைகளும் 5 பிரிவுகளின் முதலாவது இடத்தைச் தொடர்ந்து பெற்றுள்ளனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில், சீன வீரர் Lin Danனும், மகளிர் ஒற்றையர் பிரிவில், சீன வீராங்கனை Xie Xingfangனும் உலகில் முதலாவது இடம் பெற்றுள்ளார். ஆடவர் இரட்டையர் பிரிவில், சீன Cai Yun Fu Haifeng இணையும், மகளிர் இரட்டையர் பிரிவில், சீன Zhang Yawen, Wei Yili இணையும் உலகிலேயே முதலாவது இடம் பெற்றுள்ளனர். Zheng Bo, Gao Ling ஆகியோர், கலப்பு இரட்டையர் பிரிவிலான முதலாவது இடத்தைப் பெற்றுள்ளனர்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை அரசியலாக்க குறிப்பிட்ட அரசு சாரா அமைப்புக்கள் திட்டமிடுவது, சர்வதேச ஒலிம்பிக் குழு மீதான நிர்ப்பந்தத்தைத் திணிக்கின்ற நடவடிக்கையாகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், உலகிலுள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Jacque rogge தெரிவித்தார். உள்ளூர் நேரப்படிநேற்று அமெரிக்கச் செய்தி ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த போது, அவர் இவ்வாறு கூறினார்.

சர்வதேச ஒலிம்பிக் குழு, அரசியலற்ற விளையாட்டு அமைப்புகளில் ஒன்றாகும் என்று Jacque rogge சுட்டிக்காட்டினார். இதனால், உலகிலுள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. குறிப்பிட்ட அரசு சாரா அமைப்புக்கள், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் செல்வாக்கைப் பயன்படுத்தி, சொந்த ஆதாயங்களை முன்னேற்றத் திட்டமிடுக்கின்றன. இது, தவிர்க்கப் பட முடியாதது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, ஆக்கப்பூர்வமான வலிமைகளைக் கொண்டிருந்தாலும் அதன் சொந்த அளவைத் தாண்ட முடியாது என்றார் அவர்.