• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-05 09:12:18    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பண்பாட்டு விழாவின் 2 பகுதிகள்

cri

2008ம் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மாபெரும் பண்பாட்டு விழா ஏற்கனவே துவங்கியுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பகுதிகள் இதில் அடங்கும். உள்நாட்டுப் பகுதி, கடந்த திங்களில் தொடங்கியுள்ளது. வெளிநாட்டுப் பகுதி, ஜூன் திங்களில் துவங்கும். பல்வகை கலை நிகழ்ச்சிகள், சிறந்த கண்காட்சிகள், வுரைகள், கருத்தரங்குகள் மற்றும் சுறுசுறுப்பான வெளி நடவடிக்கைகள் இதில் இடம்பெறுகின்றன. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஆரவாரமான பண்பாட்டு சூழலை சீனாவின் பொது மக்களும் உலகின் விருந்தினர்களும் அனுபவிக்கின்றனர்.


இப்பண்பாட்டுக் கலைநிகழ்ச்சிகளை சீனாவின் பல்வேறு இடங்களின் கலைக் குழுக்கள் மிகுந்த ஊக்கத்துடன் அரங்கேற்றுகின்றன. தேர்தெடுக்கப்பட்ட பின், பெய்ஜிங் இசை நாடகம், பல்வேறு இடங்களின் பாரம்பரிய நாடகங்கள், இசைக்கோர்வைகள், இசை நாடகங்கள் உள்ளிட்ட 150 வகை நாடகங்கள் இப்பண்பாட்டு விழாவில் காணப்படலாம். தனிச் சிறப்பு வாய்ந்த தேசிய இனப் பண்பாடுகளை சீனாவின் சுமார் 50 சிறுபான்மை தேசிய இனங்கள் வெளிப்படுத்தும் என்று உள்நாட்டுக் கலைநிகழ்ச்சி ஏற்பாட்டுப் பணிக்குப் பொறுப்பான பண்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரி yangxiong கூறினார்.


மார்ச் திங்கள் 20ம் நாள் முதல் செப்டெம்பர் திங்களின் பிற்பாதி வரையான 6 திங்கள் காலத்தில், தேசிய அளவில் சுமார் 100 கலைக் குழுக்கள், பெய்ஜிங் மாநகரத்தில் 150 நாடகங்களை அரங்கேற்றும். அனைத்து நகரம் அல்லது தன்னாட்சிப் பிரதேசமும் தத்தமது நாடகங்களை அரங்கேற்றும். தவிரவும், இந்த நாடகங்கள், நாட்டு மற்றும் தேசிய இனச் சிறப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அதேவேளையில், மலிவான விலையில், பொது மக்கள் இந்நிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பதற்கு உத்தரவாதம் செய்யப்படும் என்று yangxiong தெரிவித்தார்.


நண்பர்களே, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பண்பாட்டு விழாவின் 2 பகுதிகள் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.