• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-05 09:04:28    
பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நகரான பியொங்யாங்

cri
பியொங்யாங், வட கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் தலைநகரமாகும். இது, Da Tong ஆற்றுக்கு அருகிலில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 2600 சதுர கிலோமீட்டராகும். இதன் மக்கள் தொகை 20 இலட்சம் ஆகும். பியொங்யாங் நகரப்பிரதேசத்தின் கட்டிட நிலப்பரப்பு 20 விழுக்காட்டை எட்டுகின்றது. எஞ்சிய பரப்பளவு, பூங்கா உள்ளிட்ட

பசுமைமயமாக்க நிலமாகும். உலகில், மிகப்பெரிய பசுமைமயமாக்க பரப்பளவைக் கொண்ட நகரங்களில் பியொங்யாங்கும் ஒன்றாகும். பியொங்யாங், வட கொரியாவின் அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு மையமாகும். அத்துடன், வட கொரிய மக்களின் மனதில் புரட்சிக்கு இதயமாகும். போருக்கு பின், பியொங்யாங்கின் தொழிற்துறை உயர்வேக வளர்ச்சியைப் பெற்றுள்ளது. வட கொரியாவின் தொழிற்துறை மையமாக பியொங்யோங் மாறியுள்ளது. நடப்பு சர்வதேச ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் 18வது நிறுத்தம் பியொங்யாங் ஆகும். ஒலிம்பிக் புனிதத் தீபம் பியொங்யாங்கிற்கு வருவது இதுவே முதன் முறையாகும்.

2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் புனிதத் தீபம், 28ம் நாள் பியொங்யாங் சென்றடைந்தது.
சீன-ஆசியான் வானொலி மற்றும் தொலைக்காட்சி உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட ஆசியான் நாடுகளின் பிரதிநிதிகள் 23ம் நாள் 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சில திடல்களையும் அரங்குகளையும் பார்வையிட்டனர். விருந்தினர்கள், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை உயர்வாக பாராட்டியதோடு, இப்போட்டி வெற்றி பெற நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். தவிர, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைப் பயன்படுத்தி தங்களது அரசியல் நோக்கத்தை எட்ட முயன்லும் நடவடிக்கைகளுக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

ஆசியான் நாடுகளின் அரசு, வானொலி மற்றும் தொலைகாட்சி வட்டார செய்தி ஊடகங்களின் உயர் நிலை பிரதிநிதிகள், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முக்கிய விளையாட்டரங்கான தேசிய விளையாட்டரங்கு, தேசிய நீச்சல் மையம் முதலியவற்றைப் பார்வையிட்டனர். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் திடல்களும் அரங்குகளும் தாம் கண்ட மிக அழகான விளையாட்டுத்திடல்களும் மற்றும் அரங்குகளுமாகும் என்று லாவோஸ் தேசிய வானொலி நிலையத்தின் இயக்குனர் Sypha Nonglath கூறினார். அவர் கூறியதாவது:
நாங்கள், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் விளையாட்டுத்திடல்களையும் அரங்குகளையும் பார்வையிட்ட போது, பல தொழிலாளர்கள் ஒலிம்பிக் திடல்களையும்

அரங்குகளையும் கட்டியமைக்க பாடுபட்டு உழைப்பதை பார்த்தோம். அவர்கள் கட்டுகின்றவை அழகான விளையாட்டுத்திடல்கள் மற்றும் அரங்குகளாகும். இந்த ஆயத்தப் பணிகள் கடினமானவை. அது தடையின்றி நடைபெற்ற, வெற்றி பெறுவதற்கு நான் இதயபூர்வமாக வாழ்த்துகிறேன் என்றார் அவர். இம்மாநாட்டில் கலந்துகொண்ட வியட்நாம் வானொலி நிலையத்தின் வெளி நாட்டு மையத்தின் துணைத் தலைவர் Thi Thuy Lan அம்மையார் பலமுறை சீனாவுக்கு வந்திருந்தவர்களில் ஒரு வராவார். ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஆயத்த பணிகள், பெய்சிங்கில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, அவர் இவ்வாறு கூறினார்.