• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-06 09:24:13    
Shen Hong அம்மையார்

cri

Shen Hong அம்மையாரின் வளர்ச்சி போக்கு, சீனச் சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணியின் உதாரணமாக திகழ்கின்றது.
Shen Hong அம்மையாருக்கு 15 வயதான போது, அவரது இடைநிலைப் பள்ளி படிப்பு சரியாக முடியவில்லை. குளிர் அதிகமாக இருக்கும் Hei Long Jiang மாநிலத்துக்கு சென்ற அவர், அங்குள்ள உற்பத்தி மற்றும் கட்டுமான சிறப்புப் பிரிவில் உழைத்தார். அவர் வயதில் மிக சிறியவராக இருந்தார். அப்போது அவரது சக பணியாளர்கள் பலர் பெய்சிங் மாநகருக்கு திரும்புவதை எதிர்பார்த்தனர். ஆனால், Shen Hongவின் கருத்து வேறானதாக இருந்தது. விளை நிலங்களில் உழைப்பதை ஒரு வகை மகிழ்ச்சியாக அவர் நினைத்தார். பின்னர், சீன வெளியுறவு கல்லூரியில்

கல்வி பயில தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அனுப்பப்பட்டார். இது, அவருக்கு நல்லதொரு வாய்ப்பை தந்தது. சீன வெளியுறவு கல்லூரியில் கல்வி பயின்ற அனுபவம், Shen Hongவின் வாழ்வில் ஏற்பட்ட பெரிய திருப்பு முனையாகும். அது மட்டுமல்ல, அவரது வளர்ச்சிக்கு முக்கிய அடிப்படையிட்டது. படிப்பை முடிந்தவுடன், சீன வெளியுறவு அமைச்சகத்தில் அவர் சேர்க்கப்பட்டு, தூதாண்மை அதிகாரியாக மாறினார்.
கடந்த நூற்றாண்டின் 80ஆம் ஆண்டுகளின் பாதியில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் பரிந்துரையுடன், Shen Hong, Zhang Qi Yue உள்ளிட்ட தலைசிறந்த தூதாண்மை அதிகாரிகள் ஐ.நாவில் பணி புரிய அனுப்பப்பட்டனர். ஐ.நாவில் பணி புரிந்த போது, ஒரு நாடு, ஒரு தேசிய இனம், ஒருவரின் தோற்றம் ஆகியவை நெருக்கமாக இணைந்துள்ளன என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.
ஐ,.நாவில் மூன்று ஆண்டுகளாக பணி புரிந்த பின், Shen Hong நாடு திரும்பினார்.

அமெரிக்காவுக்கான சீனத் தூதர் Han Xuஐ அவர் சந்தித்தார். "ஐ.நாவில் பணி புரிந்த அனுபவம் உங்களுக்கு உள்ளதால், வாய்ப்பு இருந்தால், உண்மையான அமெரிக்க சமூகத்தையும் சர்வதேச சமூகத்தையும் கற்று உணர்ந்து கொள்ளலாம் என்று Han Xu, Shen Hongவிடம் கூறினார். அப்போது Shen Hongக்கு திருமணம் முடிந்து, ஒரு மகளும் இருந்தார். கார் மற்றும் வீடும் இருந்தன. இருப்பினும் தனது சொந்த செலவில் அமெரிக்காவுக்குச் சென்று கற்று கொள்வதென Shen Hong தீர்மானித்தார். அதற்காக அவரது மகளை தனது மாமியார் வீட்டுக்கு அனுப்ப வேண்டியிருந்தது.
அமெரிக்காவில் கற்றுக்கொண்டிருந்த போது ஓய்வு நேரத்தில், சீனத் தூதரகத்துக்கு அருகில் உள்ள ஒரு உணவகத்தில் அவர் வேலை செய்தார்.
எதிர்பாராத விதமாக அமெரிக்காவில் Jin Yu Xi அம்மையாரை Shen Hong சந்தித்தார். அவர் அழகு பொருட்கள் தொழிலில் பிரமுகர் ஆவார். அதற்கு பின் Shen Hongவின் வாழ்வு,

வேறு பாதையில் முன்னேறியது. சீனாவில் பல கோடிக்கணக்கான மகளிரின் அழகை மேம்படுத்தும் கனவை நனவாக்கும் பொருட்டு, வெளியுறவு அதிகாரி பதவியிலிருந்து Shen Hong விலகினார்.
கடந்த நூற்றாண்டின் 90ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில், Shen Hong அம்மையார், Jin Yu Xi அம்மையாருடன் இணைந்து சீனா திரும்பினார். Yu Xi அழகு பொருட்களின் கூட்டு நிறுவனத்தை இருவரும் கூட்டாக நிறுவினர். அந்நிறுவனத்தின் விற்பனை தொகை, இன்று 50 கோடி யுவான் வரை அதிகரித்துள்ளது.
அழகுபடுத்துவது என்பது, ஒருவகை பண்பாடாகும். சீன மகளிர் அழகுபடுத்தும் பண்பாட்டைப் புரிந்து கொள்ளச்செய்வது, அழகு பற்றிய கருத்துக்களைப் பரவல் செய்வது போல், முக்கியத்துவம் வாய்ந்தது என்று Shen Hong அம்மையாரும் Jin Yu Xi அம்மையாரும் கருதுகின்றனர். அந்த இயக்கத்தில், கடந்த பல ஆண்டுகளாக தூதாண்மை அதிகாரியாக பணி புரிந்த தமது திறமைகளை Shen Hong முழுமையாக

வெளிப்படுத்தியுள்ளார். தற்போது அவர் வணிகத்துறையிலான தூதாண்மை அதிகாரி என அழைக்கப்படுகின்றார். Hei Long Jiang மாநிலத்தில் உற்பத்தி மற்றும் கட்டுமான சிறப்பு பிரிவில் அவர் உழைத்தார். அமெரிக்காவில் வேலை புரிந்தார். அந்த அனுபவங்களின் காரணமாக, அவர் இக்காலத்தில் முன்னணிநபராகவும், நம்பிக்கை மற்றும் ஆர்வமுடையவராகவும் மாறியுள்ளார்.
2001ஆம் ஆண்டு அவர் Yi Fu Xin Yue குழுமத்தை நிறுவினார். அவரே அக்குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியும் (CEO) முதன்மை படைப்பாளருமாக பதவி வகிக்கின்றார். இன்று சீன மத்திய தொலைக்காட்சி நிலையத்தின் புகழ் பெற்ற அறிவிப்பாளர்களின் ஆடை ஆலோசகர் அவரே. 2005ஆம் ஆண்டு அவர் எழுதிய "ஆடையும் ஈர்ப்பு ஆற்றலும்" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. சீனாவின் நவ நாகரீகப் புத்தகங்களின் விற்பனை அளவில் அவ்வாண்டில் அந்த புத்தகம் தான் முதலிடம் வகித்தது.

Yi Fu Xin Yue ஆடை நிறுவனத்தில், பணியாளர்கள் Shen Hongவின் உற்சாகத்தை உணர்ந்து கொள்கின்றனர். அந்நிறுவனத்தில் பணி புரியும் 96 விழுக்காட்டு பணியாளர்கள், பெண்கள் ஆவர். பணியாளர்களைப் பொறுத்த வரை Shen Hong சிறந்த தலைவராக மட்டுமல்ல அவர்களது நல்ல நண்பராகவும் ஆசிரியராகவும் திகழ்கின்றார்.
சீன தொழில்முறை மகளிர்களின் நவ நாகரீகத்துக்காக முழங்க, Shen Hong விரும்புகின்றார். நவ நாகரீகம் பயன் தர வேண்டும். அது வாழ்க்கையின் மனப்பான்மை ஆகும். வயது மற்றும் செல்வத்துடன் அதற்கு தொடர்பு இல்லை என்று Shen Hong அம்மையார் கருதுகின்றார்.