• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-06 09:26:39    
சீனாவிலுள்ள மலேசியா தூதரின் நல்வாழ்த்து

cri
சீனாவிலுள்ள மலேசிய தூதர் Syed Kamaruzaman, பெய்சிங்கில் பேட்டி அளித்த போது, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகளை வெகுவாகப் பாராட்டினார். திட்டப்படி, அனைத்து ஒலிம்பிக் திடல்கள் மற்றும் அரங்குகளின் பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்ற பட்டு விட்டன. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஆயத்த பணிகள் உயர் பயனை வெளிப்படுத்தியுள்ளன. பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் முயற்சியுடன், 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெறுவது உறுதி என்றார் அவர்.

கடந்த 3 ஆண்டுகளுக்குள், பெய்சிங்கின் உயர் வேக வளர்ச்சியைத் தானே கண்டறியந்ததாக Syed Kamaruzaman கூறினார்.
கடந்த 3 ஆண்டுகளுக்குள், பெய்சிங்கின் கட்டிடங்கள், போக்குவரத்து, அடிப்படை வசதிகள் ஆகியவை வளர்ச்சியைப் பெற்றுள்ளதோடு, சுற்றுச்சூழல் தரம் குறிப்பிடதக்க உயர்வை அடைந்துள்ளது. ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெறுவது மூலம், சுற்றுச்சூழல், பணிப்பயன் முதலிய துறைகளில் பெய்சிங் மேலதிக வளர்ச்சியைப் பெற முடியும் என்றார் அவர்.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி, பெய்சிங் மாநகரம் ஒரு சுற்றுலா நகராக கட்டியமைக்கப்படும். சீனாவிலுள்ள பல்கேரியத் தூதர் Peychinov, பெய்சிங்கில் நமது செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, இவ்வாறு தெரிவித்தார்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், சீனாவின் தொடர்புடைய தரப்புகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன. போக்குவரத்துத் தடை பிரச்சினையைத் தீர்ப்பது மற்றும் காற்று மாசுப்பாட்டைக் குறைப்பது என்பவை இரண்டு மிக முக்கிய பிரச்சினைகளாகும் என்று Peychinov கூறினார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் சிறந்த வாநிலை மற்றும் போக்குவரத்து நிலைமைக்கு உத்தரவாதம் அளிக்க பாடுபடும் வகையில் இன்றியமையாத நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், முந்திய ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் வெற்றிகரமான அனுபவங்களைப் பயன்படுத்தி, பயனுள்ள நடவடிக்கைகளை

மேற்கொள்ள வேண்டும். ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி, பெய்சிங் மாநகரம் ஒரு சுற்றுலா நகராக கட்டியமைக்கப்படும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெற மக்கள் அனைவரும் விரும்புகின்றனர். காற்று தரத்தில் பெய்சிங் மேலும் முன்னேற்றம் பெற நான் விரும்புகின்றேன். சீன அரசு, சுற்றுச்சூழல் பிரச்சினையை உணர்வுபூர்வமாக கையாள, பல நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது. அத்துடன், அந்நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க பயனையும் பெற்றுள்ளன என்றார். மாசு கட்டுப்பாடு துறையில், உலகுடன், சீனா ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் Peychinov விருப்பம் தெரிவித்தார்.