• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-07 08:46:45    
பண்பாட்டு மரபுச் செல்வ நாளின் கொண்டாடம்

cri

 

 

ஜுன் திங்கள் 5ம் நாள் வரையான, தொல் பொருட்களின் சேத அறிக்கைகளை சிச்சுவான், கான்சு, ஷான்சி உள்ளிட்ட 7 மாநிலங்களின் தொல் பொருள் வாரியங்கள் வெளியிட்டுள்ளன.

 

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களுக்கு கடுமையான இழப்புகள் ஏற்பட்டன. சிச்சுவான் மாநிலத்தின் ஆயிரக்கணக்கான முக்கிய பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களுக்கு கடுமையான சேதங்கள் ஏற்பட்டன.

 

நிலநடுக்கத்துக்குப் பின், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று பண்பாட்டு மரபுச் செல்வங்களின் சேத நிலைமையை சீன துணை பண்பாட்டுத் துறை அமைச்சர் zhouheping பார்வையிட்டார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் நிலைமையை மட்டுமல்ல, அப்பிரதேசங்களின் பண்பாட்டு மரபுச் செல்வங்களை கையேற்றும் மக்களின் இடர்களைச் சமாளிக்கும் எழுச்சியையும் அவர் உணர்ந்தார்.

 

ஜூன் திங்கள் 14ம் நாள், சிச்சுவான் மாநிலத்தின் 88 கலைஞர்கள் பெய்ஜிங் தேசிய இனப் பண்பாட்டு மாளிகையில் கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட beichuan மாவட்டத்தின் qiang இனத்தைச் சேர்ந்த 23 கலைஞர்கள் அவர்களில் அடக்கம் என்று zhouheping கூறினார்.

 

பண்பாட்டு மரபுச் செல்வ நாளைக் கொண்டாடும் வகையில், சீனாவின் பண்பாட்டு அமைச்சகம் 46 சிறப்பு கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

 

துவக்க விழாவில் நடைபெற்ற சிச்சுவான் மாநிலத்தின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் கலைஞர்கள் வழங்கிய தனிச்சிறப்பு வாய்ந்த கலைநிகழ்ச்சிகளால் மக்கள் மனமுருகினர் என்று சீனக் கலை ஆராய்ச்சி மையத்தின் துணை இயக்குநர் zhangqingshan தெரிவித்தார்.

 

நண்பர்களே, சீனாவின் பண்பாட்டு மரபுச் செல்வ நாள் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.