• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-07 09:24:48    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு சீனாவிலுள்ள இலங்கையின் தூதர்களின் நல்வாழ்த்துக்கள் 3

cri
இலங்கை மக்கள் விளையாட்டை மிகவும் நேசிப்பவராய் விளங்கி வருகின்றனர். இலங்கையின் மனமார்ந்த நல்ல நண்பர் சீனாவாகும். ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை சீனா நடத்துவதால், அதற்கு இலங்கை மக்கள் மேலும் பெரும் ஊக்கம் கொண்டுள்ளனர் என்றார் அவர்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் ஆடவர் மற்றும் மகளிருக்கான 100 மீட்டர் இறுதி ஓட்ட போட்டியைப் பார்க்க Amunugama மிகவும் விரும்புகின்றார். ஏனென்றால், 2000ம் ஆண்டு சீட்னி ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில புகழ் பெற்ற இலங்கை ஓட்டப் பந்தய வீரர் Jayasinghe, மகளிருக்கான 200 மீட்டர் ஓட்ட போட்டியின் வெள்ளி பதக்கத்தைப் பெற்றார். இலங்கை வரலாற்றில், ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்ற முதலாவது வீராங்கனை அவராவார். எனவே, ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் குறுகிய ஓட்டப் பந்தய போட்டியில் இலங்கை மக்கள் சிறப்பு எதிர்பார்பை கொண்டுள்ளனர்.

ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் வலிமையான ஆற்றலைச் சீனா கொண்டுள்ளது. குறிப்பாக, 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில், சீனா 32 தங்கம் பதக்கங்களைப் பெற்று, ரஷியாவை தாண்டி, பதக்க வரிசையில் இரண்டாவது இடம் பெற்றது என்று Amunugama தெரிவித்தார். உபசரிப்பு நாடான சீனா, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் மேலும் நல்ல சாதனைகளை பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
முந்திய ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்றதை விட உபசரிப்பு

நாடான சீனா மேலதிக பதக்கங்களைப் பெறும். 130 கோடி சீனரின் ஊக்கம் மூலம், சீன வீரர்கள் தங்களது தலைசிறந்த போட்டியாற்றலை வெளிக்கொணர்வர் என்றார் அவர்.
சீன வானொலி நிலையம் மூலம், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கான அருமையான வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று Amunugama விருப்பம் தெரிவித்தார். 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை சீனா திறமையாக நடத்தும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கு இலங்கை அரசு மற்றும் மக்களின் சார்பில் நான் உளமார்ந்த வாழ்த்து தெரிவிக்கின்தேன் என்றார்.