• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-08 16:48:45    
ஒலிம்பிக்கை வரவேற்பது

cri

நடைபெற உள்ள பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி குறித்து, உலகின் பல்வேறு பிரதேசங்களின் செய்திஊடங்கள் பெருமளவில் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.


மக்களின் மனதில் ஆழமாக பதியும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை பெய்ஜிங் நடத்தும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மூலம், சீனாவின் மாபெரும் விளையாட்டு ஆற்றல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று இந்தியாவின் The Hindu செய்தியேடு இன்று வெளியிட்ட தலையங்கம் அறிவித்தது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறும் என்று இந்திய Jagarn செய்தியேடு அண்மையில் வெளியிட்ட கட்டுரையில் தெரிவித்தது.

 
பிரான்ஸில் புகழ்பெற்ற L'equipe செய்தியேடு நேற்று ஒலிம்பிக் பற்றிய சிறப்புக் கட்டுரையை வெளியிட்டது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிகழ்ச்சிநிரல், பல்வேறு போட்டிகளில் தங்கப் பதக்கங்களைப் பெறக் கூடிய விளையாட்டு வீரர்களின் அறிமுகங்கள் ஆகியவற்றையும் வெளியிட்டது.

 
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக, பெய்ஜிங் மேற்கொண்டுள்ள ஆயத்தப் பணிகளின் புதிய முன்னேற்றம், பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்களின் ஏற்பாட்டுப் பணிகள் முதலியவற்றை Reforma செய்தியேடு நேற்று சிறப்புக் கட்டுரைகள் மூலம் அறிமுகப்படுத்தியது.


ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சீனாவின் முழுமையான வளர்ச்சிக்கு மட்டுமல்ல, சீனாவுக்கு முன்கண்டிராத அறைகூவலையும் கொண்டு வந்துள்ளது என்று மலேசிய Sin Chew நாளேடு நேற்று வெளியிட்ட விமர்சன கட்டுரை தெரிவித்தது.


சிங்கப்பூர் பிரதிநிதிக் குழு மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முன்னேற்றங்கள் பற்றி அறிமுகப்படுத்தியதோடு, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவின் மீது சிங்கப்பூர் மிகுந்த கவனம் செலுத்தியது lianhezaobao நாளேடு இன்று வெளியிட்ட கட்டுரை தெரிவித்தது.