• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-08 09:51:14    
வெளிநாட்டு நண்பர்களின் பாராட்டு

cri
அண்மையில், சில வெளிநாட்டுச் செய்தியேடுகள், வானொலிகள், தொலைக்காட்சிகள் மற்றும் சீன வானொலியின் நேயர்கள், வெளிநாட்டு நண்பர்கள் ஆகியோர், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணியைப் பாராட்டினர். அதே வேளையில், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, வெற்றிகரமாக நடை பெறுவதை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவது, சீனாவின் பெருமையாகும். மட்டுமல்ல, அது இந்தியா மற்றும் ஆசியாவின் பெருமையாகும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்று இந்திய மக்கள் உளமார எதிர்பார்க்கின்றனர் என்று இந்திய நேயர்கள் தெரிவித்தனர்.
ஒலிம்பிக் கிராமத்தில் பிரான்ஸ் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை Le Figaro எடுத்துக்கூறியது. ஒலிம்பிக் வரலாற்றில் பெய்சிங் ஒலிம்பிக்கிலான வசதிகள் மிகச் சிறந்தவை என்று பிரான்ஸின் துப்பாக்கிச்சுடுதல் அணியின் தலைவர் Michel Bury கூறுகின்றார்.
பிரதிநிதிக் குழுக்களின் எண்ணிக்கை, வீரர்களின் எண்ணிக்கை, விளையாட்டு வகைகள் முதலியவற்றை பொறுத்த வரை, முன்னெப் போது, கண்டிராத அளவில் இப்பெய்சிங் ஒலிம்பிக் அமைந்தது. மக்களின் கவனத்தை ஈர்ப்பது உறுதி என்று நேற்று ஜப்பானிய NHK தொலைக்காட்சியின் விமர்சகர் ஒருவர் கூறினார்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா, சீனாவுக்கு புதிய செல்வாக்கை உருவாக்க உதவிடும். மாபெரும் தன்னம்பிக்கையால், சீனா, தனது செல்வாக்கை கட்டியமைக்க முடியும் என்று கனடாவின் Glose and mail நாளேடு கூறுகின்றது.