• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-08 10:33:08    
சீனாவின் ஜீநோ இனம்

cri

சீனாவின் ஜீநோ இன மக்கள், யுன்னான் மாநிலத்தின் xishuangbanna தன்னாட்சி வட்டத்தின் ஜீநோ கிராமத்தில் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகை, 18000 ஆகும். ஜீநோ இன மக்கள் தங்களை ஜீநோ என அழைக்கின்றனர். சீன மொழியில் youle என்று கூறுகிறோம்.

ஜீநோ இன மக்களுக்கு சொந்த மொழி உண்டு. அது, சீன-திபெத் மொழி குடும்பத்தின் திபெத்-மியான்மார் கிளையைச் சேர்ந்தது. ஜீநோ இன மக்களின் மொழிக்கு எழுத்துக்கள் இல்லை. 1957ம் ஆண்டு வரை, இலத்தீன் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு எழுத்துக்களை உருவாக்கினர். ஓசமிச காவியம், ஜீநோ இன மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் மிக விரிவான பரப்பும், ஆழ்ந்த செல்வாக்கும் வாய்ந்த புராணக் கதையாகும்.

ஜீநோ இன மக்கள், பல கடவுள்களையும் மூதாதையர்களையும் வழிபடுகின்றனர். சீன ஹன் வம்சத்தின் zhuge kongming என்ற அறிஞரை வழிபடுகின்றனர்.

ஜீநோ இன மக்கள், முக்கியமாக, வேளாண்துறையில் ஈடுபடுகின்றனர். தேயிலையை பரியிடும் வரலாறு மிக நீண்டகாலமாக உள்ளது. தேயிலையில் மிக புகழ் பெற்றது, pu er தேயிலையாகும். இப்பிரதேசத்தின் தேயிலை வளையும் அளவு, யுங்நான் மாநிலம் முழுவதுமான தேயிலை அளவில் 30 விழுக்காட்டுக்கு மேல் வகிக்கிறது. தேநீர் மதுபானம் ஆகிய இரண்டையும் ஜீநோ இன மக்கள் மிகவும் விரும்புகின்றனர்.

முன்பு, தீ, குடும்பத்தின் ஓர் உயிர்நாடி போல் மிக இன்றியமையாதது என்று ஜீநோ இன மக்கள் கருதுகின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் சில தீ அடுப்புகள் இருக்கின்றன.

அடுப்புகளில் இடைவிடாமல் தீ எரிந்து கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு அடுப்பும், ஒரு குறிப்பிட்ட நோக்கிற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும், நோக்கிற்கு அப்பாற்பட்டுப் பயன்படுத்தப்பட கூடாது.

ஜீநோ இன மக்கள், பல கடவுள்களையும் மூதாதையர்களையும் வழிபடுகின்றனர். வசந்த விழா, நிலா விழா முதலிய ஹான் இன மககளின் விழாக்களைத் தவிர, ஆண்டுக்கு 10ம் திங்கள் திருவிழா,6ம் திங்கள் திருவிழா என இரண்டு புத்தாண்டு விழாக்களையும் கொண்டாடுகின்றனர்.