• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-08 21:05:39    
பெய்ஜிங் ஒலிம்பிக் துவக்க விழாவுக்கான சிறப்பு நிகழ்ச்சி இ

cri

நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, யீங்யீங் என்னும் ஒலிம்பிக் புஃவா பற்றிய இசையாகும். யீங்யீங் என்பது, ஒரு திபெத் தாக்கின் ஆடு ஆகும். சீனாவின் தனிச்சிறப்பியல்பாக பாதுகாக்கப்படும் விலங்கான இது, பச்சை நிறத்தில் ஒலிம்பிக்கின் சின்னமாக இருக்கிறது. பெய்ஜிங் ஒலிம்பிக்கின் மூன்று முக்கிய கருத்துக்களில் ஒன்றாக இடம்பெறுகின்ற பசுமை ஒலிம்பிக், தற்போது, பெய்ஜிங்கில் பரவலாக்கப்பட்டுள்ளது.

2001ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துகின்ற உரிமையை வெற்றிகரமாகப் பெற்ற பின், பெய்ஜிங் மாநகரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மொத்தம் 14 ஆயிரம் கோடி யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது. ஏழு ஆண்டுகால முயற்சி மூலம், பெய்ஜிங் மாநகரம் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பெய்ஜிங் தோட்டக்கலை பசுமைமயமாக்கப் பணியகத்தின் தலைவர் DONG RUI LONG கூறியதாவது

கடந்த ஆண்டின் இறுதிவரை, பெய்ஜிங் மாநகரின் பசுமைமயமாக்க பரப்பின் விகிதம் 43 விழுக்காடாக உயர்ந்துள்ளது. முழு மாநகரிலும் 20 இயற்கை பாதுகாப்பு மண்டலங்கள் நிறுவப்பட்டுள்ளன என்றார் அவர்.

தவிர, பெய்ஜிங், காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான கட்டுப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது. தொழிற்துறையில் மாசுப்பாடு அதிகமான தொழில் நிறுவனங்களின் மீது, இடப்பெயர்வு, உற்பத்தி நிறுத்தம், தொழில் நுட்பச் சீர்த்திருத்தம் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, பழைய வாடகைச் சிற்றுந்துகள் மற்றும் பேருந்துகளுக்குப் பதிலாக எரியாற்றல் சிக்கனப்படுத்துகின்ற புதிய ரக வாகனங்களையும் பேருந்துகளையும் பயன்படுத்துகின்றது.

கடந்த சில ஆண்டுகளில் பெய்ஜிங்கின் விடாமுயற்சி, பல்வேறு துறைகளின் பாராட்டையும் ஏற்பையும் பெற்றுள்ளது. சீனாவிலுள்ள தான்சானிய தூதர் ஒமர் மபுலி கூறியதாவது

தற்போது பெய்ஜிங்கின் காற்றுத் தரம் மேம்பட்டுள்ளது. சீன அரசு மேற்கொண்ட பல நடவடிக்கைகள் இதற்கு முக்கிய காரணங்களாகும். விமானம் மூலம் பெய்ஜிங்கை அடைந்தவுடன், விமான நிலைய சுற்றுப்புறத்திலும், நகரப் பகுதிகளுக்குச் செல்லும் வழிகளிலும் பல பசுமையான மரங்களையும் பல்வண்ண மலர்களையும் காணலாம் என்றார் அவர்.

திபெத் தாகின் ஆடு, அறியாத உலகத்தை ஆராய்ச்சி செய்ய முயல்கிறது. இதனால், யீங்யீங் என்னும் ஒலிம்பிக் புஃவா, அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக் எழுச்சியையும் குறிக்கின்றது.

மே திங்கள் 8ம் நாள், ஒலிம்பிக் தீபம் ஜோமுலுங்மா சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தது. மங்கல மேகங்கள் வரையப்பட்ட தீபக்கோல் ஏந்தப்பட்டதுடன், விளையாட்டு வீரர்களின் துணிவு, அறிவியல் தொழில் நுட்பம் ஒலிம்பிக்கிற்கு கொண்டு வரும் புதிய காட்சி ஆகியவற்றால், மக்கள் கவரப்பட்டுள்ளனர். சீன விண்வெளி பயண அறிவியல் தொழில் நுட்ப கூட்டு நிறுவனம் ஜோமுலூங்மா தீபத்தை ஆய்வு செய்யும் பிரிவை நிறுவியது. இப்பிரிவின் துணை தலைமை வடிவமைப்பாளர் சாவ் வென் ச்சிங், இக்கட்டான நிலைமையை நினைவு கூர்ந்து கூறியதாவது

கடல் மட்டத்திலிருந்து 8000 மீட்டர் உயரம் மற்றும் காற்று அழுத்தம் தாழ்வான இடத்தில் தீபத்தின் எரிகின்ற நேரம், வடிவம், வண்ணம் ஆகியவற்றை உத்தரவாதம் செய்வதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கோரிக்கையையும் நிறைவு செய்ய வேண்டும். அத்திட்டப்பணி, ஒரு அறைகூவலாகும். இரு ஆண்டுகள் கூட்டு முயற்சி, எண்ணற்ற பரிசோதனைகள், சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம், இந்தக் கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம் என்றார் அவர்.

உண்மையில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணியில், சீனா, அறிவியல் தொழில் நுட்பத்தில் பல பணிகளை முதல் முறையாக உருவாக்கியுள்ளது. பறவை கூடு என்ற ஒலிம்பிக்கின் முக்கிய அரங்கு, மாபெரும் அளவிலான, கட்டமைப்பு மிக சிக்கலான, மிக அதிகமான உருக்கு கம்பிகளைப் பயன்படுத்திய கட்டிட்டமாகும்.

பெய்ஜிங் ஒலிம்பிக் திட்டப்பணிகள் சீனாவின் இடைவிடாத தற்சார்ப்பு புத்தாக்க கட்டுமானங்கள் ஆகும். பறவை கூட்டை தவிர, நீர் கன சதுரம் என்னும் தேசிய நீச்சல் மையம், தலைநகர சர்வதேச விமான நிலையத்தின் 3வது முனையம் உள்ளிட்ட பல ஒலிம்பிக் திட்டப்பணிகளில், சீனா உற்பத்தி செய்த புதிய ரக உருக்குப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால், 46 வகை புதிய கட்டுமா வழிமுறைகளும், பல்வகை புதிய பொருட்களும் புதிய உற்பத்திப் பொருட்களும் உருவாகியுள்ளன.