• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-08 10:23:38    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சீனாவிலுள்ள பிரென்சு தூதரின் நல்வாழ்த்துக்கள் 2

cri
ஆகஸ்ட் 8ம் நாள் நடைபெறும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் பிரென்சு பிரதிநிதிக் குழுவின் கொடி ஏந்துபவரான Estangue சிட்னி மற்றும் ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் கரைபுரண்டோடும் நீரில் படகு போட்டியில் முதலிடம் பெற்றார். இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சிறந்த சாதனையை அவர் பெறுவது உறுதி என்றார் அவர்.

கடந்த 30 ஆண்டுகளில் சீனாவின் வேகமான வளர்ச்சியையும் இரு நாட்டு நீண்டகால நட்புறவின் வளர்ச்சியையும் சு ஹொய் பார்த்துள்ளார். சீனாவுடன் தூதாண்மை உறவை உருவாக்கியது முதல், சீன-பிரான்ஸ் உறவு 44 ஆண்டுகள் நீண்டகால வரலாற்றை பெற்றுள்ளது. அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பில் இது மாபெரும் முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. இந்த நட்புப்பூர்வ பரஸ்பர நலன் ஒத்துழைப்புறவை நாங்கள் தொடர்ந்து நிலைநிறுத்துவதோடு, இரு நாட்டு ஒத்துழைப்புறவை தொலைநோக்கு பார்வையில் அணுக வேண்டும். இரு நாட்டு மக்களுக்கிடையிலான பரிமாற்றத்திற்க்கும் ஒத்துழைப்புக்கும் பங்காற்ற எங்களால் இயன்றதனைத்தையும் செய்வோம் என்றார் அவர்.
கடந்த பல ஆண்டுகளில், சீனாவும் பிரான்ஸும் ஒத்துழைப்பு நட்புறவை நிலைநிறுத்தி வருகின்றது. ஆனால், பிரான்ஸில் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கையை சிலர் சீர்குலைத்ததோடு, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு சில பிரான்ஸ் அதிகாரிகள் பொறுப்பற்ற கூற்றுகளை வெளியிட்டுள்ளனர். இது இரு நாட்டுறவுக்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தியது

என்று சில செய்தி ஊடகங்கள் கருதுகின்றன. பிரான்ஸில் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கையின் போது ஏற்பட்டதை நிகழ்ச்சியை சு ஹொய் அறிந்து மனம் வருந்தியதாக தெரிவித்தார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்துகொள்வதாக பிரெனசு அரசுத் தலைவர் சார்கோசி தெரிவித்தார். இம்முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று சு ஹொய் கருத்து தெரிவித்தார்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் பிரென்சு அரசுத் தலைவர் சார்கோசி அரசுத் தலைவர் மட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் நடப்புத் தலைவர் பதவி வகிக்கும் நாட்டின் அரசுத் தலைவரும் ஆவார். ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின் கூட்டு முடிவு இதுவாகும். எனவே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார் அவர்.

சீன வானொலி நிலையம் மூலம், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கும் சீன மக்களுக்கும் அருமையான வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று சு ஹொய் விருப்பம் தெரிவித்தார்.
2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவது உறுதி. ஒலிம்பிக் எழுச்சி இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மேலும் வலுப்படுத்தப்பட நான் விரும்புகின்றேன் என்றார் அவர்.