• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-08 09:38:06    
சீன மக்கள் நாளேட்டின் வாழ்த்துக் கட்டுரை

cri
29வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இன்று பெய்ஜிங்கில் துவங்குவதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ஓர் உலகம் ஒரு கனவு என்ற தலைப்பிலான கட்டுரையை மக்கள் நாளேடு இன்று வெளியிட்டது.
நூறாண்டுகளுக்கு முன்பிருந்து, எப்போது சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தலாம் என்று சீன மக்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். இன்று, நீண்ட கால வரலாறுடைய ஒலிம்பிக்கும் கீழை நாகரிகமும் ஒன்று சேர்க்கப்பட்டன. மாசற்ற ஒலிம்பிக், அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக், மானுட வள ஒலிம்பிக் ஆகியவற்றின் மூலம், 130 கோடி சீன மக்கள் ஒலிம்பிக் பற்றிய தமது கனவை நிறைவேற்றியுள்ளனர்.
உலகில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடத்தப்படுவது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது சீனா மீதான உலகின் நம்பிக்கையாகும். உலகிற்கு சீனாவின் பங்களிப்பும் ஆகும். பெய்ஜிங்கில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவது, சீனாவுக்கும் உலகிற்கும் தனிச்சிறப்பு மிக்க அரிய செல்வத்தை விட்டுச் செல்லுவது உறுதி என்று பெரும்பாலானோர் நம்புகின்றனர் என்று இக்கட்டுரை கூறியது.