• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-09 09:51:13    
பழைய தாமரைக் குளம்

cri

சீனாவின் முக்கியமான தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவான பழைய தாமரைக் குளப் பூங்கா, சீனாவில் புகழ்பெற்ற 10 பூங்காக்களில் ஒன்றாகும். அது, பௌ திங் நகரத்தின் நடுவில் உள்ளது.

அதன் முக்கிய வாயில், வடக்கு நோக்கி, தெற்கு பகுதியில் அமைந்திருக்கிறது.

அது, 1227ம் ஆண்டில் கட்டியமைக்கப்பட்டது. தற்போது, அதன் மொத்த பரப்பளவு 24 ஆயிரம் சதுர மீட்டராகும். இக்குளத்தின் மொத்த பரப்பளவு 7 ஆயிரத்து 900 சதுர மீட்டராகும். அதைக் கட்டியமைப்பதில், சீனாவின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளிலான பழைய கட்டிட பூங்காக்கள் வடிவிலான தலைசிறந்த பாணியோடு அமைந்துள்ளது.

1284ம் ஆண்டு, அது நிலநடுக்கத்தால் சீர்குலைக்கப்பட்டது. மிங் வம்சக்காலத்தில், அது பெருமளவில் புனரமைக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது.

பழைய தாமரைக் குளப் பூங்காவில், புகழ்பெற்ற பன்னிரண்டு காட்சிகள் காணப்படுகின்றன. அவற்றின், கல்லில் செதுக்கப்பட்டுள்ள வேலைப்பாடுகள் மிகவும் புகழ்பெற்றன. குளத்தின் வடக்கில் செதுக்கப்பட்டுள்ள தூபியின் தாழ்வாரத்தின் நீளம், 33 மீட்டராகும். அங்கு 82 தூபிகள் உள்ளன.