• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-09 11:16:46    
நேயர்களின் கருத்துக்கள்

cri
கலை: ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நிறைவேற்றி உலகத்தை தன்வயப்படுத்திய பெய்ஜிங் மாநகரம், தற்போது பாராலிம்பிக்ஸ் எனும் ஊனோமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்த ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறது. வெற்றிப் பெறுவதல்ல, போட்டியில் பங்கேற்பதே முக்கியம் என்ற உன்னத எழுச்சிக்கேற்ப போட்டியாளர்கள் பெய்ஜிங் மாநகரில் ஒன்றுகூடி, நம்மை அதிசயிக்க செய்யும் சாதனைகளை நிகழ்த்தவுள்ளனர்.
க்ளீட்டஸ்: செப்டம்பர் 6, சனிக்கிழமையன்று கோலாகலமான துவக்க விழாவுடன், உடலளவில் சவால் விடுக்கப்பட்ட நம் சகோதரர்கள், உள்ள உறுதியோடு களத்தில் இறங்கி, பதக்கங்களுக்காக போட்டியிடவுள்ளனர்.

கலை: ஆம். அவர்கள் அனைவருக்கும் நேயர் நண்பர்களாகிய உங்கள் அனைவரின் சார்பில், வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம். ஒலிம்பிக் போட்டி காலத்தில், கடிதம், மின்னஞ்சல், தொலைபேசி என பல வழிமுறைகளில் வாழ்த்துக்கள் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து நிகழ்ச்சிக்கு செல்கிறோம்.
......தொடர்ந்து வெற்றிகரமாக நிறைவடைந்த பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நண்பர்களின் மனதில் ஆழபதிந்து விட்டுள்ளது. இது பற்றிய பாராட்டுக்களையும் கேட்டு ரசியுங்கள்.
.......வேலூர் மாவட்டம் முணுகப்பட்டு கண்ணங்சேகர் தெரிவித்த கருத்தை கேளுங்கள்.
.......தொடர்ந்து அரியங்க உண்டபட்டி இளங்கோவன் தெரிவித்த கருத்தை கேளுங்கள்.
மின்னஞ்சல் பகுதி
வளவனூர் புதுப்பாளையம், எஸ்.செல்வம்
29வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை பெய்ஜிங் மாநகரம் மிகவும் வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருக்கிறது. பொதுவாக, ஓர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை மீளாய்வு செய்தால், அதில் சில சாதனைகள் செய்த வீரர்களே நினைவுக்கு வருவார்கள். பெய்ஜிங் விளையாட்டுப் போட்டியிலும் சில

வீரர்கள் மாபெரும் சாதனைகளை நிகழ்த்தியிருந்தபோதிலும், இப்போட்டியை எதிர்காலத்தில் மீளாய்வு செய்பவர்களுக்கு, பெய்ஜிங் மாநகரமே நினைவுக்கு வரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அந்த அளவிற்கு மாபெரும் திட்டமிடலை நிறைவேற்றிக்காட்டிய பெய்ஜிங் மாநகருக்கும், பெய்ஜிங் போட்டி அமைப்புக் குழுவிற்கும் என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மதுரை 20, அண்ணாநகர், N. இராமசாமி
24.8.08 அன்று வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் பெய்ஜிங்கில் ஒலிம்பிக் திருவிழா நிறைவடைந்தது. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 10,000க்கும் அதிகமான வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்ட ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 51 தங்கப் பதக்கங்களை வென்று சீனா முதலிடம் பெற்றமை பாராட்டுக்குரியது.
யாழ்ப்பாணம், பா. ஈசன்

29வது கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தங்கப் பதக்க வரிசையில் சீன அணி முதலிடம் பெற்றதில் மகிழ்ச்சியடைவதோடு, எனது பாரட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடிதப்பகுதி
கலை: இலங்கை ஒட்டமாவடி நேயர் ஜ. ப. முகம்மட் ரியாஸ் எழுதிய கடிதம். சீன வானொலியின் நிகழ்ச்சிகள், மற்ற வானொலிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. மாணவர்களுக்கு பயன் தரக்கூடிய தகவல்களை கொண்ட அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு, கேள்வியும் பதிலும், மலர்ச்சோலை போன்றவை, மிகச் சிறப்பானவை. சீன வானொலியின் சேவை தொடர்ந்து வளம் பெறவேண்டும்.
......பெருந்துறை எம் சிவகுமார் நிகழ்ச்சிகளை கேட்டு செய்திகள் பற்றிய கருத்தை தெரிவிக்கிறார். இதை கேளுங்கள்.
க்ளீட்டஸ்: தி ஹிந்து நாளேட்டில் சீன வானொலியின் தமிழ்ப்பிரிவு பற்றி வெளியான கட்டுரை குறித்து சென்னை தி. ராம்கிஷோர் எழுதிய கடிதம். தமிழ்ப்பிரிவின் பணி, அதன் சிறப்பு மற்றும் பணியாற்றும் அன்பர்கள் ஆகிய விபரங்களை அழ்கான

நிழற்படத்தோடு சிறப்பாக தந்தது, தி ஹிந்து நாளேட்டின் கட்டுரை. கலையரசி அவர்கள் ஆங்கிலத்துறையில் சேர்ந்து பின் தமிழ்ப்பிரிவுக்கு மாறி, தமிழகம் தஞ்சையில் தமிழ் கற்று பணிபுரிந்து வரும் தகவலை சிறப்பாக எழுதியிருந்தார் செய்தியாளர் பல்லவி அய்யர்.
கலை: சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சி குறித்து இலங்கை கினிகத்தேனை எம். பி. மூர்த்தி எழுதிய கடிதம். சீனாவின் பூ வேலைப்பாடுகள், பூ வேலைப்பாடுட கூடிய தலையனை உறைகள், துணிவகைகள், தலையில் அணியக்கூடிய பொருட்கள், 3000 நீல நிறத் தாமரை இலைகள் கொண்ட போர்வை என சீனாவின் வண்ணமிகு பூ வேலைப்பாடுகள் பற்றி கலைமகள் சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சியில் தொகுத்தளித்தார். மிகச் சிறப்பாக இருந்தது.
க்ளீட்டஸ்: அடுத்து உத்திரக்குடி கலைவாணன் ராதிகா எழுதிய கடிதம். அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் உயர்வேக கணினி என்ற தலைப்பில் அதிவிரைவு

கணக்கீட்டுத்திறன் கொண்ட கணினி பற்றி கூறினார் தமிழன்பன். டானிங் 5000 ஏ என்ற சிறப்புக் கணினி பற்றிய தகவல்கள் சிறப்பு. அதிவிரைவாக செயல்படும் இத்தகைய கணினிகளின் ஆற்றல் பற்றிய தகவல்கள் பயனுள்ளவை.
கலை: தென்பொன்முடி தெ.நா.மணிகண்டன் எழுதிய கடிதம். அழகான குவாங்சி எனும் பொது அறிவுப் போட்டிக்கான நான்கு கட்டுரைகளை கேட்டேன். குவாங்சியின் அழகு, இயற்கை வளம், அங்கு வாழும் மக்களின் பணிகள், வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலா இடங்கள் ஆகியவை பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது.
க்ளீட்டஸ்: சென்னை எஸ் ரேணுகாதேவி எழுதிய கடிதம். சொல்ல இனிக்கும், கேட்க மணக்கும் கண்டுபிடிப்புகள் ஏராளம்.
சீனப் பண்பாடு நிகழ்ச்சியின் மூலம் அச்சுக்கலை, காகிதம், வெடிமருந்து, திசைகாட்டி ஆகிய சீனாவின் மாபெரும் கண்டுபிடிப்புகளை பற்றி அறிந்தோம். சுவரிருந்தால்தானே சித்திரம் வரைய முடியும். அச்சுக்கலைக்கு வித்திட்ட சீனர்கள், காகிதத்தின் மூலம் நூல்

வடிவத்தில் ஐரோப்பா, ஆசியா என எங்கும் அச்சுக்கலையை பரவச்செய்தார்கள். பீங்கான், பட்டு, தாள் பணம் போன்ற கண்டுபிடிப்புகளுக்கும் சொந்தக்காரர்கள் சீனர்கள் என்பது பெருமைக்குரியது.
கலை: செய்தித்தொகுப்பு நிகழ்ச்சி குறித்து நாகர்கோவில் பிரின்ஸ் ராபர்ட் சிங் எழுதிய கடிதம். "தூய்மையான ஒலிம்பிக்" என்ற கட்டுரையை கேட்டேன். கடந்த 7 ஆண்டுகளில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புடன் கூடிய தரமான கட்டிடங்கள் கட்டப்பட்டன. பெய்ஜிங்கிலுள்ள பூங்காக்களில் 48 கோடி கன மீட்டர் நீர் மறுசுழற்சி முறை மூலம் பயன்படுத்தப்படுகிறது. 2007 ஆம் ஆண்டை விட 2008 ஆம் ஆண்டில் கரியமில வாயுவின் வெளியேற்றம் 50 விழுக்காடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீன அரசின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை.