• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-11 16:06:09    
2008 ஆப்பிரிக்க பண்பாட்டு விழா

cri
இவ்வாண்டில் பெரும் அளவிலான சீன-ஆப்பிரிக்க பண்பாட்டுப் பரிமாற்ற பொருட்காட்சி, சீன-ஆப்பிரிக்க மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. அதேவேளையில், ஆப்பிரிக்காவின் பல்வேறு பிரதேசத்தின் கலைகளுக்கிடையில் உள்ள வேறுபாடுகளையும் நாங்கள் கண்டுரசித்துள்ளோம். ஆப்பிரிக்க கலைகளின் ஈர்ப்பு ஆற்றலை நாங்கள் அனுபவித்துள்ளோம். ஆப்பிரிக்க கலை, மிகவும் பழையதாக இருப்பதோடு, மிகுந்த உயிர் ஆற்றலை கொள்கிறது. அவற்றைக் கண்டு, சீன கலைஞர்கள் மனமுருகினர். 2008 ஆப்பிரிக்க பண்பாட்டு விழாவின் திட்டமிடல் குழு உறுப்பினரும், சீன வெளிநாட்டுக் கலை பொருட்காட்சி மையத்தின் துணை இயக்குநருமான wanjiyuan இவ்வாறு தெரிவித்தார்.
ஆப்பிரிக்க பண்பாட்டுத் துறை பிரமுகர்கள் சீனாவில் பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை, 2006ம் ஆண்டு முதல், சீன அரசு நடைமுறைப்படுத்த துவங்கியது. இவ்வாண்டு, இந்த திட்டத்தின் அளவு விரிவாகியுள்ளது. ஆப்பிரிக்காவின் பல நாடுகளின் ஓவியர்கள், தொல் பொருள் பாதுகாப்பு நிபுணர்கள், பண்பாட்டுத் துறை அதிகாரிகள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். இரண்டு திங்கள்காலத்தில், தென் ஆப்பிரிக்காவின், Benin உள்ளிட்ட 5 நாடுகளின் ஓவியர்கள், Shenzhen நகரில் நடைபெற்ற ஓவியர்கள் கூட்டத்தில் கருத்துக்களை பரிமாறிகொண்டனர். இப்பயணத்தின் போது, கென்யாவின் ஓவியர் Edward,சீன கலைஞர்களுடன் கருத்துக்களை பரிமாறினார். ஆப்பிரிக்கா பற்றி சீன கலைஞர்களின் பல்வேறு படைப்புக்களைக் கண்ட பிறகு, அவர்கள் ஆப்பிரிக்க பண்பாடுகளை நன்கறிவது குறித்து Edward வியப்படைந்தார். ஆப்பிரிக்கா பற்றிய சீன கலைஞர்களின் புரிந்துணர்வு, மேலை நாட்டவர்களை விட மேலும் நன்றாக உள்ளது. அவர்களின் படைப்புகளைக் கண்டு, ஆப்பிரிக்க மக்கள் உருவாக்கிய படைப்புகள் என நினைத்தேன் என்று அவர் கூறினார்.
நண்பர்களே, 2008 ஆப்பிரிக்க பண்பாட்டு விழா என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.