• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-12 10:10:53    
மியௌ இனத்தைச் சேர்ந்த வட்டத் தலைவி லு வான் சியாங்

cri

தென் மேற்கு சீனாவிலுள்ள குய் சோ மாநிலத்தின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மியௌ மற்றும் துங் இனத் தன்னாட்சி சோ, பசுமையான மலைத் தொடரும் தெளிவான ஆற்று நீரும் கொண்டு, அழகாக காட்சியளிக்கிறது. அங்குள்ள மக்கள் எளிமையும் நேர்மையும் கொண்ட இதயம் உள்ளவர்கள். மியௌ உள்ளிட்ட சிறுபான்மை தேசிய இன மக்கள் அங்கே செறிந்து வாழ்கின்றனர்.
மனதில் உற்சாகம் நிறைந்த மியௌ இன மக்கள் ஆடல் பாடல் துறையில் தேற்சி பெற்றவர்கள். லாங் தே வட்டத்தின் துணைத் தலைவி மியௌ இனத்தைச் சேர்ந்தவராவார். லு வான் சியாங் என்ற அழகான பெயர் கொண்ட அவரும் ஆடல் பாடலுக்கு விதிவிலக்கு அல்ல. 2002ஆம் ஆண்டில் குய் சோ தேசிய இன கல்லூரியில் படிப்பை முடித்த அவர், பாடவும் நடனமாடவும் விரும்புகிறார். தெளிந்த பண்பு நலன்கள் கொண்ட அவர், விரிவான மற்றும் சிக்கலான அடி மட்ட நிர்வாக பணியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கவில்லை. 2006ஆம் ஆண்டில் லாங் தே வட்டத்தின் துணைத் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், அவ்வட்டத்திலுள்ள 41 கிராமங்களுக்கும் அவர் சென்றுள்ளார்.

"எமது கிராமப்புறத்தில் தீயணைப்புப் பணி முதலிடத்தில் வைக்கப்படுவதால், அடிக்கடி சோதனைப் பயணம் செய்ய வேண்டும். மின்னோட்ட மண்டலத்துக்கும் ஒட்டுமொத்த கட்டுபாட்டுக்கும் நான் பெறுப்பேற்கின்றேன். எனவே, பொது மக்களுக்கிடை சர்ச்சைகளை தீர்க்க சமூகத்தின் அடி மட்டத்துக்குச் செல்ல வேண்டும். மேலும், மழைக் காலத்தில் சில மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படக் கூடும். அவ்விடங்களில் அடிக்கடி சோதனைப் பயணம் மேற்கொள்ள வேண்டும்" என்றார் லு வான் சியாங் அம்மையார்.
சுமார் 10 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட லாங் தே வட்டம் மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. அங்குள்ள மியௌ இன மக்கள் தலைமுறை தலைமுறையாக இரண்டு மாடி கொண்ட மரக் கட்டமைப்புடைய கட்டிடங்களில் வாழ்கின்றனர். புகைப் போக்கி இல்லாத சமையல் அறையில் விறகு பயன்படுத்தப்படுவதால், தீ விபத்து எளிதில் ஏற்படலாம். குடி மக்களின் உயிர் மற்றும் உடைமை பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், மின்னோட்ட வழி மற்றும் சமையல் அறையின் சீர்திருத்தம் செய்ய பெரும்பாலான மக்களுக்கு அவர் அறிவுரை கூறி வழிகாட்டினார். கடந்த ஆண்டின் இறுதியிலிருந்து, பொது மக்களுக்கு அறிவுரை கூறவும் மின்னோட்ட வழியின் சீர்திருத்தத்தைச் சோதிக்கவும் அவர் நாள்தோறும் கிராமத்துக்குச் செல்ல வேண்டும். தற்போது இக்கிராமத்திலுள்ள 138 குடும்பங்களும் பாழடைந்த மின் கம்பிகளை மாற்றியுள்ளன. 10 குடும்பங்களின் சமையல் அறைகளில் எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் புதிய வகை அடுப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. விறகுப் பயன்பாடு குறைக்கப்பட்டதோடு, சமையல் அறையின் மரக் கட்டமைப்பு சுவர் சிவப்பு செங்கல் சுவராக மாற்றப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்படக் கூடிய உள்ளார்ந்த ஆபத்து நீக்கப்பட்டுள்ளது.
கிராமவாசிகள் மின் கம்பிகளையும் சமையல் அறைகளையும் சீராக்கச் செய்ததில் லு வான் சியௌ பெரும் முயற்சி மேற்கொண்டார். திட்டப்பணி அணியினர் தங்களது வீட்டில் நுழைய கிராமவாசிகள் அனுமதிக்கவில்லை. கிராமவாசிகள் கூட்டம் நடத்துவது, வானொலி மூலம் பிரச்சாரம் செய்வது, தீயணைப்பு பாதுகாப்பு பற்றிய திரைப்படம் காண்பிப்பது, பிரச்சார தரவுகளை வினியோகிப்பது ஆகிய வழிமுறைகளின் மூலம் அவர் கிராமவாசிகளுக்குக் கல்வியளித்தார்.

லு வான் சியௌ அம்மையார் பணியில் பெற்றுள்ள சாதனைகள் மேல் மட்ட தலைவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. லேய் ஷான் மாவட்டத்தின் துணைத் தலைவர் ஜியாங் தா ஜுன் பாராட்டிக் கூறியதாவது—
"அவர் உணர்வுப்பூர்வமாக பணிபுரிந்து வருகிறார். நாங்கள் ஏற்பாடு செய்த ஒவ்வொரு கடமையையும் அவர் தமது திட்டம் மற்றும் எங்கள் கோரிக்கைக்கிணங்க தாமதமின்றி செவ்வனே நிறைவேற்ற முடியும். அவர் திறமைமிக்க ஒரு வட்ட நிலை ஊழியராவார். அவரது பணி பற்றி நாங்கள் மனநிறைவு அடைகின்றோம்" என்றார் அவர்.
மியௌ இன மக்கள் மேலும் அமைதியாகவும் இன்பமாகவும் வாழச் செய்யும் வகையில், லு வான் சியாங் பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளார். லாங் தே வட்டத்திலுள்ள கிராமங்களுக்கிடையில் தூரம் அதிகம். ஒரே கிராமத்திலுள்ள மக்கள் சிதறி வாழ்கின்றனர். சில மலைப் பாதைகளில் காலால் மட்டுமே நடக்க வேண்டியிருக்கிறது. இதனால், கிராமத்துக்குச் செல்லும் போது அதிக நேரம் பாதையில் செலவழிக்க நேரிடும். இது பற்றி லு வான் ஜியாங் கூறியதாவது—
"சில கிராமங்கள் மலை உச்சியில் உள்ளன. பொதுவாகக் கூறினால், மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சியை அடைய ஒரு மணி நேரத்துக்கு மேல் தேவைப்படுகிறது. வெகு தூரத்திலுள்ள ஊ சியௌ கிராமத்தை அடைவதற்கு 3 மணி நேரத்துக்கு மேல் தேவைப்படுகிறது" என்றார் அவர்.
லு வான் ஜியாங் அம்மையாரைப் பொறுத்த வரை, உடல் சோர்வு அவ்வளவு இன்னல் வாய்ந்ததாக இல்லை. சில சமயம் தனது நல்லெண்ணத்தை கிராமவாசிகள் புரிந்து கொள்ளவில்லை என்பதே துயரமடையச் செய்யும் விடயமாகும் என்று அவர் கருதுகிறார். எடுத்துக்காட்டாக, கல்விப் பிரச்சினை. கிராமங்களிலுள்ள குழந்தைகள்

அனைவரும் பள்ளியில் கல்வி பெறச் செய்யும் வகையில், லு வான் சியாங் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுரை கூறுகிறார். தற்போது, வட்டம் முழுவதிலும் உள்ள துவக்கப் பள்ளி நிலை மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர். இடைநிலைப் பள்ளி மாணவர்கள் சிலர் இன்னும் பள்ளிக்குத் திரும்பவில்லை.
"இடைநிலைப் பள்ளி மாணவர்கள் சிலர் கல்வி பயில விரும்பவில்லை. அவர்களின் குடும்ப நிலை பரவாயில்லை. ஆனால் அவர்களின் பெற்றோர் எங்கள் பணிக்கு ஆதரவளிக்கவில்லை. சிந்தனை ரீதியான இத்தகைய அணி திரட்டல் மிகவும் கடினமானது" என்றார் லு வான் சியாங்.
கடினமான பணியில் ஈடுபட்ட லு வான் சியாங், அடிக்கடி தவறாக புரிந்து கொள்ளப்பட்ட போதிலும், பொது மக்கள் இன்னல் மிகுந்த நிலையில் சிக்கியிருப்பதற்குப் பதிலாக அவர்கள் தன் மீது புகர் செய்தமையை அவர் சகித்துக் கொள்ள விரும்புகிறார். தவறான புரிந்துணர்வு தற்காலிகமானது தான் என்று அவர் நம்புகிறார். எனவே, பணியின் காரணமாக அவர் கண்ணீர் சிந்தவில்லை.
"இந்தப் பணியின் நடைமுறை தார்மீக செவ்வமாகும் என கருதுகின்றேன். சொந்த பணி கடினமானதாக உள்ளது என உணர்ந்த போதிலும், சில சமயம், பொது மக்கள் தெரிவித்த வரவேற்பையும் பாராட்டுக்களையும் கண்டு, எமது முயற்சிகள் மதிப்பு மிக்கவை என உணரலாம்" என்றார் அவர்.