• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-12 10:15:31    
NBA ஆட்டத்திலான சீனாவின் வீரர் சுன் யு

cri
8ம் நாள் நடைபெற்ற NBA கூடைப்பந்து போட்டி ஆட்டத்தில், சீனாவின் வீரர் சுன் யு, லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கஸ் அணிக்கு தலைமை தாங்கி, போட்டியில் விளையாடினார். லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கஸ் அணி, 105-92 என்ற கோள்கணக்கில், மில்வவ்கி பக்ஸ் அணியை தோற்கடித்தது. போட்டியில் கலந்துகொண்டதற்கு சுன் யு மகிழ்ச்சி தெரிவித்தார். காலில் ஏற்பட்ட காயம், தனது விளையாட்டை பாதித்தது என்று 4 புள்ளிகளை பெற்ற சுன் யு தெரிவித்தார்.

Manchester united அணி, 2008ம் ஆண்டு உலக கால்பந்து சங்கம் நடத்துகின்ற போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டது. ரூனி, கிரிஸ்டினா ரொனால்டோ உள்ளிட்ட புகழ் பெற்ற வீரர்கள் இப்பெயர் பட்டியலில் அடங்குகின்றனர்.
புதிதாக உருவாக்கப்பட்ட உலக ஆடவர் கூடைப்பந்து மன்றத்தின் சாம்பியன் பட்டப்போட்டி 2010ம் ஆண்டு அக்டோபர் திங்களில் நடைபெறும் என்று சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம் 9ம் நாள் அறிவித்தது. சீனாவின் நன் ஜிங், செந்து நகர்கள், இப்போட்டியை நடத்த, விண்ணப்பம் செய்துள்ளன. 5 நாள் நீடிக்கும் இப்போட்டியில் 10 ஆட்டங்கள் நடைபெறும். 8 அணிகள் முதல் போட்டியில் கலந்துகொள்ளும்.

இப்போட்டி குறித்து, சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம், NBA ஒன்றியத்துடன் பல முறையில் தொடர்பு கொண்டுள்ளது. முதல் போட்டிக்கு பின், அப்போட்டி மதிப்பீடு செய்யப்படும் பின், NBA ஒன்றியத்தின் அணியை அழைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம் தெரிவித்தது.
தென்கொரிய பயிற்சியாளர் கிம் சம் பேக்கின் உடன்படிக்கை தொடராது. எனவே அவர் சீன மகளிர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் என்ற பொறுப்பிலிருந்து பாறி விடுவார் என்று சீன ஹாக்கி விளையாட்டு சம்மேளனம் 8ம் நாள் அறிவித்தது.
1999ம் ஆண்டு டிசம்பர் திங்கள், கிம் சம் பேக் சீன மகளிர் ஹாக்கி அணிக்கு தலைமை தாங்கிய பின், அவ்வணியின் விளையாட்டு தரம் இடைவிடாமல் உயர்ந்து வந்தது. கடந்த 9 ஆண்டுகளில், ஆசிய விளையாட்டுப் போட்டியின் சாம்பியன் பட்டங்களை 2 முறையும், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கத்தை பெற்றது.

யின் தியை சன், வாங் பாவ் சன், ஓ சு லியாங் ஆகியோர் உருவாகிய சீன தேசிய ஆடவர் கால்பந்து அணிக்கு தலைமை தாங்கி, 2009ம் ஆண்டின் ஜனவரி திங்களில் நடைபெறும் ஆசிய கோப்பையின் தேர்வுப் போட்டியில் கலந்துகொள்ளும் என்று சீன கால்பந்து சம்மேளனம் 8ம் நாள் தனது இணையதளத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சன் யு ஹுவா, காவ் யுங் மிங், சன் ஜின் காங், சன் சியாவ் யு ஆகிய பயிற்சியாளர் குழு, சீன தேசிய மகளிர் கால்பந்து அணிக்கு தலைமை தாங்கும் என்றும் சீன கால்பந்து சம்மேளனம் அறிவித்தது.