• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-06 09:41:08    
இசை விருது`

cri
இசை விருது`

தொலைக்காட்சி நிறுவனங்கள் பல, மக்களின் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றன. அவ்வாறு இசை தொலைக்காட்சியான MTV ஆப்பிரிக்காவில் நடத்திய இசைப்போட்டி ஆப்பிரிக்க கண்டத்திலான இசையை வெளிவுலகிற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாக மாறியுள்ளது. ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இசை விருது நிகழ்ச்சிக்கான போட்டியில் நைஜீரியாவை சேர்ந்த இருவர் மிக உயர்ந்த விருதுகளை வென்றுள்ளனர். நைஜீரிய இசைக்கலைஞர் D'banj சிறந்த பாடகர் விருதையும், அதேநாட்டை சேர்ந்த Naeto C சாதனையாளர் விருதையும் வென்றுள்ளனர். இசை ஆர்வலர்கள் அனுப்பிய குறுந்தகவல்களை வைத்து விருது பெறுவோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆப்பிரிக்கா நீண்டகால இசை வளம் நிறைந்த கண்டமாக இருந்தாலும், மேற்கத்திய இசைகளோடு போட்டிப்போட்டு, முன்னுக்கு வந்து இசையை சந்தைப்படுத்துவதில் பல இடர்பாடுகளை அங்குள்ள இசைக்கலைஞர்கள் எதிர்கொண்டனர். இசை தொலைக்காட்சியான MTV நடத்திய இப்போட்டி ஆப்பிரிக்க இசையை வெளிவுலக சந்தைக்கு திறக்கும் சிறந்த முயற்சியாகியுள்ளது