• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-03 15:41:47    
திபெத்தின் மாற்றத்திற்கான திறவுகோள்

cri

1959ம் ஆண்டு மார்ச் திங்கள் 28ம் நாள் வரலாற்றில் குறுகிய ஒரு நாள் மட்டுமே. ஆனால் சீனாவின் திபெத் இன மக்களைப் பொறுத்தவரை, நவகால மற்றும் பழைய சமூகத்தை பிரித்து காட்டும் நாளாக மார்ச் 28ம் நாள் திகழ்கின்றது. அன்று முதல் சிங்காய் திபெத் பீடபூமியில் தலைவிதியை மாற்றக் கூடிய ஜனநாயகச் சீர்திருத்தம் துவங்கியது. அரசியல் மற்றும் மதம் இணைந்திருந்த நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறை அப்போது நீக்கப்பட்டது. இலட்சக்கணக்கான பண்ணை அடிமைகளும் சொத்தடிமைகளும் விடுதலை பெற்று தாங்களும் தாய்நாட்டின் உரிமையாளர்களாக மாறினர். பராமபூத்லா ஆறு அலையெழுந்து மகிழ்ச்சிகரமாக ஒலித்து சென்றது. டாங்குலா மலை பழைய திபெத் புத்துயிர் பெற்றதற்கு சாட்சியளித்துள்ளது.


திபெத்தில் நடைமுறையாக்கப்பட்ட ஜனநாயகச் சீர்திருத்தம் உலகில் இறுதியான பண்ணை அடிமை முறையை வரலாற்றின் குப்பையில் தூக்கியெறிந்தது. இலட்சக்கணக்கான பண்ணை அடிமைகள் விடுதலை பெற்றதுடன் திபெத் நவீன சோஷியலிச முன்னேற்ற போக்கில் நுழைந்தது. மனித குலத்தின் நாகரிக அத்தியாயத்தை ஜனநாயகச் சீர்த்திருத்தம் பொன்னெழுத்துக்களில் பொறித்துள்ளது.
ஆட்சியாளர், பிரபுக்கள், புத்தமத உயர் நிலை துறவிகள், பண்ணை உரிமையாளர்கள் ஆகியோர் பழைய திபெத்தின் மக்கள் தொகையில் 5 விழுக்காடு மட்டுமே வகித்தனர். ஆனால் அவர்கள் திபெத்தின் விளைநிலங்கள், மேய்ச்சல் தளங்கள் மற்றும் கால்நடைகள் அனைத்தையும் உரிமை கொண்டனர். ஆனால் மக்கள் தொகையில் 90 விழுக்காட்டை வகித்தவர்கள் பண்ணை உரிமைகளே. அவர்களில் தலைவிதி மிகச் சிலபண்ணை உரிமையாளர்கின் கைகளுக்குள் சிக்கியிருந்தது.


அதிபிற்போக்கான, பவமைவாத நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறை திபெத்தின் பொருளாதாரத்தையும் திபெத் இன மக்களின் வாழ்க்கையையும் அழிவின் விளம்புக்கு கொண்டு சென்றது. வரலாற்றுப் பதிவேட்டின் படி யுவான் வம்சக்காலத்தில் திபெத் இன மக்கள் தொகை 10 இலட்சமாக இருந்தது. ஜனநாயகச் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பிருந்த திபெத்தில் திபெத் இன மக்களின் எண்ணிக்கை 11 இலட்சத்து 50 ஆயிரமாகும் அதாவது 700 ஆண்டுகாலத்தில் திபெத்தின மக்கள் தொகை ஒரு இலட்சம் மட்டும் அதிகரித்தது. திபெத்திலான கலகம் அமைதியான முறையாக சமாளிக்கப்பட்ட பின் அமெரிக்காவின் புகழ் பெற்ற செய்தியாளர் ஆனான் லூயிஸ் ஸட்ரான் திபெத்தில் செய்தியறிவிப்பு செய்த போது இது தொடர்பாக விமர்சனக் கட்டுரை ஒன்றை எழுதினார். மேலை நாடுகளில் சீனா திபெத் இனத்தின் மீது அடக்குமுறை செய்தது என்று பரவிய கூற்று முற்றிலும் பொய்யானதாகும். உண்மையில் இந்த பண்ணை உரிமையாளர்களே தமது மக்களை ஒழித்தனர் என்று தன் கட்டுரையில் ஆத்திரத்துடன் எழுதியிருந்தனர்.