• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-03 15:46:08    
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தை உருவாக்கும் ஆயத்த பணி 

cri

1951ம் ஆண்டில் நடுவண் அரசும் திபெத் உள்ளூர் அரசும் திபெத்தை அமைதியாக விடுதலை செய்வது தொடர்பான 17 அம்சங்கள் கொண்ட உடன்படிக்கையை உருவாக்கின. திபெத்தின் அப்போதைய சூழ்நிலையின் படி நுணுக்கமான முன்னேற்றக் கொள்கையை நடுவண் அரசு நடைமுறைப்படுத்தியது. சோஷியலிச அமைப்பு முறையின் சீர்திருத்தம் அப்போது திபெத்தில் நடைமுறைப்படுத்தப்பட வில்லை. 1955ம் ஆண்டு அரசவை 17 அம்சங்கள் கொண்ட உடன்படிக்கையின் விதிக்கேற்ப திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தை உருவாக்கும் ஆயத்த கமிட்டியை நிறுவி தன்னாட்சிப் பிரதேசத்தின் உருவாக்கத்திற்கான ஆயத்தப் பணியை துவக்கியது.

அரசியலும் மதமும் இணைந்த பண்ணை அடிமை முறை மாறாமல் இருப்பதை உத்தரவாதம் செய்யும் வகையில் தலாய் லாமாவை தலைவராக கொண்ட திபெத் பிற்போக்கு உயர் நிலைக் குழு ஏகாதிபத்தியத்துக்கு விலைபோனது. பிறகு தாய்நாட்டை பிளவுபடுத்துவதற்கான ஆயுதந்தரித்த கலகத்தை தொடுத்தது. 1959ம் ஆண்டு காலஞ்சென்ன்ற தலைமை அமைச்சர் சோ என் லாய் சீன மக்கள் குடியரசின் அரசவை கட்டளையில் கையொப்பமிட்டு திபெத் உள்ளூர் அரசை கலைப்பதாக அறிவித்தார். திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திற்கான ஆயத்தக் குழு திபெத் உள்ளூர் அரசின் அதிகாரத்தை நிறைவேற்றி திபெத்தில் வாழ்கின்ற பல்வேறு இன மக்களுக்கு தலைமை தாங்கி கலகத்தை சமாளித்தது. அதேவேளையில் ஜனநாயகச் சீர்த்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசவை கட்டளை பிறப்பித்தது. விளைவாக இலட்சக்கணக்கான பண்ணை அடிமைகள் விடுதலை பெற்று திபெத் வரலாற்றின் புதிய பக்கத்தை திறந்தனர். நிலப்பிரபுத்துவ பண்ணை உரிமையாளர்களை சார்ந்த நில உரிமை பறிக்கப்பட்டது. கலகத்தில் கலந்து கொண்ட பண்ணை உரிமையாளர்களின் விளைநிலங்களும் உற்பத்திக் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவை பண்ணை அடிமைகளுக்கும் இதர அடிமைகளுக்கும் விநியோகிக்கப்பட்டன. கலகத்தில் கலந்து கொள்ளாத பண்ணை உரிமையாளர்களின் விளைநிலங்கள் மற்றும் உற்பத்திக் கருவிகளை அரசு வாங்கி அவற்றை பண்ணை அடிமைகளுக்கும் அடிமைகளுக்கு விநியோகித்தது.

அரிசியல் மற்றும் மதம் இணைந்த அரசியல் அமைப்பு முறை அழிக்கப்பட்ட பின் மத நம்பிக்கை சுதந்திரம் தாய்நாட்டைபற்றி சட்டத்தை பின்பற்றும் லாமா கோயில்களும் இயல்பான மத நடவடிக்கைகளும் அரசியலில் தலையிடாமல் இருப்பதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அரசு தெள்ளத்தெளிவாக கட்டளை பிறப்பித்தது. அதேவேளையில் அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் மடங்கள் கொண்டிருந்த நிலப்பிரபுத்துவ சிறப்பு உரிமைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன. மக்கள் தார்மீக ரீதியில் மாபெறும் மாற்றத்தைப் பெற்றனர்.

திபெத்தில் தன்னாட்சி பிரதேச அமைப்பு முறை படிப்படியாக நடைமுறைபடுத்தப்ப்பட்டுள்ளது. ஜனநாயகச் சீர்திருத்தின் மூலம் திபெத் இன மக்கள் இதர பல்வேறு இன மக்கள் போல அரசியலமைப்பு சட்டமும் சட்ட அமைப்புகளும் வழங்கும் அனைத்து அரசியல் உரிமைகளையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். 1961ம் ஆண்டில் திபெத்தின் பல்வேறு இடங்களில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பண்ணை அடிமைகள் முதல் முறையாக நாட்டின் குடிமக்கள் என்ற உரிமையை பயன்படுத்தி பொதுத் தேர்தலில் கலந்து கொண்டனர். 1965ம் ஆண்டு செப்டம்பர் திங்களில் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. அப்போது முதல் திபெத் இன மக்கள் தமது விவகாரங்களை தாங்களே நிர்வகிக்கும் உரிமையை முழுமையாக அனுபவித்து வருகின்றனர்.