• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-03 16:23:49    
நிதி நெருக்கடி சமாளிப்புக்கான முன்மொழிவு

cri

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு, உள்நாட்டுத் தேவையின் விரிவாக்கம், தொடரவல்ல வளர்ச்சி திறன் உயர்வு முதலிய கருத்துக்களைப் பற்றி, சிறப்பு கலந்தாய்வு மற்றும் விவாத கூட்டங்களை நடத்தி, சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளிக்க தேவையான முன்மொழிவுகளை அரசிடம் முன்வைக்கும். சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசியக் குழு தலைவர் ஜியா சிங் லின் மார்ச் 3ம் நாள் ஆண்டு கூட்டத்தொடரில் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஓராண்டில், சர்வதேச பொருளாதார மற்றும் நிதி நிலைமை சிக்கலாக உள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி, மிகவும் கடுமையான அறைகூவல்களை எதிர்நோக்கி வருகிறது. வேறுபட்ட கட்டங்களிலான பொருளாதார வளர்ச்சியின் மீது, அரசியல் கலந்தாய்வு மாநாடு காலதாமதமின்றி முன்மொழிவுகளை முன்வைத்து, ஒட்டுமொத்த கொள்கைகளின் சரிப்படுத்தலுக்கு ஆக்கப்பூர்வமான பங்காற்றியுள்ளது.

அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினர்களான தனியார் தொழில் முனைவோர், ஆக்கப்பூர்வமான சமூகப் பொறுப்பேற்று, பணியாளர்களை வேலையை விட்டு நீக்காது, ஊதியத்தைக் குறைக்காது செயல்பட, பாடுபட வேண்டும் என்று சியா ஜிங் லின் ஊக்குவித்தார்.