• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-03 18:22:55    
சீன மக்கள் அரசியல் கலந்தய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத்தொடர்

cri
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத்தொடர் மார்ச் 3ம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் துவங்கியது. இம்மாநாட்டின் தேசியக் குழுவின் தலைவர் ஜியா சிங்லின் வழங்கிய பணியறிக்கையை, 2100க்கு மேலான உறுப்பினர்கள் கேட்டறிந்தனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான பல கட்சி ஒத்துழைப்பு மற்றும் அரசியல் கலந்தாய்வின் முக்கிய நிறுவனமான சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு, சீனாவின் அரசியலில் சோஷிய ஜனநாயகத்தை வெளிக்கொணரும் முக்கிய வடிவமாகும். பல்வேறு கட்சிகள், நிறுவனங்கள், பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் பல்வேறு துறையினரின் அரசியல் கலந்தாய்வு, ஜனநாயகக் கண்காணிப்பு, அரசியல் பங்கெடுப்பு ஆகியவற்றின் மூலம், நாட்டின் முக்கிய கொள்கைகளை வகுப்பதில் பங்காற்றியுள்ளனர். இந்த அடிப்படை அரசியல் அமைப்பு முறை, சீனாவின் நாட்டு நிலைமைக்குப் பொருந்தியது என்பதை, நடைமுறைகள் நிரூபித்துள்ளன.

சீனாவைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு சாதாரணமான ஆண்டு அல்ல. எனவே, சீனா பெற்றுள்ள சாதனைகளில், அரசியல் கலந்தாய்வு மாநாட்டு உறுப்பினர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என்று ஜியா சிங்லின் கூறினார்.

சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பல்வேறு துறைகளிலான முக்கிய பிரச்சினைகள் பற்றி, சிறப்பான முன்மொழிவுகளை முன்வைத்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசின் தொடர்புடைய முடிவுகளுக்கு உதவி அளித்துள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஓராண்டில், தேசிய மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டு உறுப்பினர்கள், 55 சிறப்பு கள ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு, 10 பார்வையாளர் குழுக்களை அமைத்து, சுமார் 20 மாநிலங்களிலும் பிரதேசங்களிலும் மாநகரங்களிலும் பார்வையிட அனுப்பி, 4700க்கு மேலான கருத்துருக்களை வழங்கியுள்ளனர். இதனால், நாட்டின் கோட்பாடு மற்றும் முக்கிய பிரச்சினைகள் பற்றிய கலந்தாய்வு, முக்கிய சட்டங்களின் நடைமுறை நிலைமைக்கான கண்காணிப்பு, மக்கள் பொது ஆர்வம் செலுத்தும் பிரச்சினைகள் பற்றிய விவாதம் ஆகியவை பயனுள்ளதாக நிறைவேற்றப்பட்டன.

சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளிக்க, தேசிய மக்கள் கலந்தாய்வு மாநாடு, தமது திறமைசாலி மேம்பாட்டைப் பயன்படுத்தி, வீடு மற்றும் நில வணிகச் சந்தையில் இடர்பாட்டுத் தடுப்பு, நிதி கண்காணிப்பு மற்றும் மேலாண்மை, தற்போதைய ஒட்டுமொத்த பொருளாதார நிலைமை முதலிய சிறப்பு கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி, குறிப்பிடத்தக்க பயனுள்ள முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது.

மனித முதன்மை என்பது, தேசிய மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டு உறுப்பினர்களின் கடப்பாடுகளில் முக்கிய இடம் பெறுகிறது.

பொது மக்கள் கவனம் செலுத்திய பிரச்சினைகளை, 2009ம் ஆண்டு தேசிய அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் முக்கிய பணிகளாக கொண்டு, பணியறிக்கையில் சேர்க்க வேண்டும் என்று, ஜியா சிங்லின் தெரிவித்தார். பொருளாதாரத்தின் நிதானமான வேகமான வளர்ச்சியை முதன்மே கடமையாகவும், சமூகத்தின் இணக்கத்தையும் நிதானத்தையும் பேணிக்காப்பதை, முக்கிய பொறுப்பாகவும் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச நிதி நெருக்கடியின் வளர்ச்சிப் போக்கில் நெருக்கமாக கவனம் செலுத்தி, பொருளாதார அதிகரிப்பை முன்னேற்றும் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளின் உண்மை பயன்களைக் கண்காணித்து, மக்களின் வாழ்க்கையில் எப்பொழுதும் கவனம் செலுத்த வேண்டும். வேலை வாய்ப்பு, சமூகக் காப்புறுதி, மருத்துவ சிகிச்சை மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் பண்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட மையப் பிரச்சினைகள் பற்றி, உரிய முன்மொழிவுகளை முன்வைத்து, பொது மக்களின் நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளை உரிய முறையில் தீர்க்க வேண்டும் என்றும் ஜியா சிங்லின் தெரிவித்தார்.