• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-03 11:23:06    
சீன அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மீதான கவனம்

cri
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்று பெய்சிங்கில் துவங்கும். 2009ஆம் ஆண்டுக்கான முக்கிய இரு கூட்டத்தொடர்களின் துவக்கத்தை இது கோடிட்டுக்காட்டுகின்றது. சீனாவுக்கான பிரேசில் தூதர் Hugueney அண்மையில் சீன வானொலி நிலையத்தின் செய்தியாளருக்கு பேட்டி அளிக்கையில், சீனத் தலைமையமைச்சர் வென் சியாபாவ் வழங்கவுள்ள அரசு பணி அறிக்கை, குறிப்பாக நிதி நெருக்கடியைச் சமாளி்க்க சீன அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்துவதாக கூறினார்.

இரு கூட்டத்தொடர்களின் போது, சீனத் தலைவர்கள் வழங்கும் பணி அறிக்கைகள், சீனாவில் உள்ள வெளிநாட்டுத் தூதர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது:

"அழைப்பின் பேரில், சீனாவிலான வெளிநாட்டுத் தூதர்கள் கலந்து கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளிலும் நான் கலந்து கொள்வேன். சீனத் தேசிய மக்கள் பேரவைக் கூட்டத்தொடரின் துவக்க விழாவில் தலைமையமைச்சர் வென் சியாபாவ் வழங்கவுள்ள அறி்க்கை மீது முழு எதிர்பார்ப்பு கொள்கின்றேன். இதிலிருந்து 2009ஆம் ஆண்டுகான பணியை சீன அரசு எவ்வாறு ஏற்பாடு செய்து, தற்போதைய நிதி நெருக்கடியை எவ்வாறு சமாளிக்கும் என்பது பற்றி அறிய விரும்புகின்றேன்" என்று அவர் கூறி்னார்.

சீன அரசின் எண்ணத்தை அறிந்து கொள்வது, எதிர்காலத்தில் சீன-பிரேசில் ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கு ஆக்கப்பூர்வமாக அமையும் என்று அவர் வலியுறுத்தினார்.

நிதி நெருக்கடியை சீன அரசு விரைவாக சமாளித்து, பொருளாதார அதிகரிப்பை உத்தரவாதம் செய்யும் நடவடிக்கைகளையும் Hugueney பாராட்டினார்.