• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-03 11:04:23    
ஐரோப்பாவுக்குச் சென்ற கொள்வனவுக் குழு

cri
ஐரோப்பாவுக்குச் சென்ற கொள்வனவுக் குழுவின் அதிகாப்பூர்வ பெயர், சீன வர்த்தக முதலீட்டு முன்னேற்றக் குழு என்பதாகும். சீன வணிகத் துறை அமைச்சகம், வெறியுறவு அமைச்சகம், தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகம், தொழில் மற்றும் தகவல் மயமாக்க அமைச்சகம் உள்ளிட்ட அரசு வாரியங்களும், இயந்திர மற்றும் மின்னாற்றல், உணவுப் பொருட்கள் மற்றும் கால்நடைகள், நெசவுத் தொழில் ஆகியவை தொடர்பான ஏற்றுமதி இறக்குமதி வணிகச் சங்கம் மற்றும் அமைப்புகளும், சுமார் 200 சீன தொழில் முனைவோரும் இக்குழுவில் இடம்பெற்றனர். இவ்வாண்டு பிப்ரவரி 24ஆம் நாள் முதல் 28ஆம் நாள் வரை, ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய 4 நாடுகளில் இக்குழு பயணம் மேற்கொண்டது.

இக்குழுவின் தலைவர் Chen Deming பயணத்தின் போது பேசுகையில், ஐரோப்பாவுக்கு கொள்வனவுக் குழுவை அனுப்புவது, இன்னல் மிகுந்த நிலைமையில் சீன அரசு நடைமுறை நடவடிக்கை மூலம் வர்த்தகப் பாதுகாப்பு வாதத்தை எதிர்த்து, ஐரோப்பாவுடன் இணைந்து கூட்டாக நெருக்கடியைச் சமாளிக்கும் தெளிவான நிலைப்பாட்டை போதியளவில் காட்டுகிறது என்று கூறினார். இனிமேல் ஜரோப்பாவின் இதர நாடுகளுக்கு கொள்வனவுக் குழுவையும் முதலீட்டு சோதனைக் குழுவையும் சீனா அனுப்பும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம், சீனாவின் முதலாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும், மிகப் பெரிய ஏற்றுமதிச் சந்தையாகவும் இருக்கிறது. சீனா, ஜரோப்பாவின் இரண்டாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாகும். சீன வணிக அமைச்சகத்தின் புள்ளி விபரங்களின்படி, கடந்த ஆண்டு சீன-ஜரோப்பிய இருதரப்பு வர்த்தகத் தொகை 42000 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியது.