• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-03 16:33:50    
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய குழுவின் தலைவரின் கருத்து

cri

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் 2வது கூட்டத்தொடர் மார்ச் 3ம் நாள் பிற்பகல் பெய்சிங்கில் துவங்கியது. ஹுச்சிந்தாவ், வூ பாங்கோ, வென்ச்சியாபாவ், சியா சிங்லின் முதலிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன அரசின் தலைவர்கள் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் குழுவின் தலைவர் சியா சிங்லின், சீனாவின் பல்வேறு கட்சிகள், தேசிய இனங்கள் மற்றும் வட்டாரங்களைச் சேர்ந்த 2100க்கு மேலான உறுப்பினர்களுக்கு நிரந்தர கமிட்டியின் பணி குறித்து அறிக்கையிட்டார்.

2008ம் ஆண்டில், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு பெற்றுள்ள சாதனைகளை அவர் உறுதிப்படுத்தினார். மாநாட்டின் கடமைகளை நடைமுறைப்படுத்தும் போது,  மனித முதன்மை என்ற மதிப்பு கருத்தில் எப்போதும் ஊன்றி நிற்க வேண்டும். மக்களின் நன்மையை முக்கியமாக கொண்டு, மக்களின் உண்மையான நிலைமை பற்றிய மேலதிக கருத்துக்களை முன்வைத்து, மக்களின் விருப்பத்துக்குரிய ஆலோசனைகளை கேட்டறிந்து, மக்களுக்கு நலன் தரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சியா சிங்லின் குறிப்பிட்டார்.

தவிர, பொருளாதாரத்தின் நிதானமான விரைவான வளர்ச்சியை நிலைநிறுத்துவது என்பது, 2009ம் ஆண்டில் இம்மாநாட்டின் முதல் கடமையாகும் என்று அவர் கூறினார்.