• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-06 16:32:30    
தீயிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ள சியாங் இனப் பண்பாடு

cri

இந்த கல்வி காலம் தொடக்கம் மேல்நிலையில் கல்வி பயில்கின்ற மாணவி லீ சன் ஹுன் இந்த வகுப்பில் கலந்து கொள்கிறார். வகுபபில் குறிப்பிடப்படுகின்ற சியாங் இனத்தின் பண்பாடறிவு அவருக்கு நலன் தந்துள்ளது. இந்த வகுப்பு மூலம் சியாங் இனப் பண்பாடு வெளிக்கொரப்பட்டு பரவுவது தூண்டப்படும் என்று அவர் உணர்ந்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது.
சியாங் இனத்தை சேராத மக்கள் எங்கள் பண்பாட்டை மேலும் கூடுதலாக அறிந்து கொள்ளவும் உலகம் மேலும் செழுமையாகவும் துணை புரிய இந்த வகுப்பு பங்கு ஆற்றலாம் என்றார் அவர்.
2008ம் ஆண்டு மே திங்கள் 12ம் நாள் நிகழ்ந்த ரிச்டர் அளவான 8 திகிரி அளவான நிலநடுக்கத்தில் சியாங் இன மக்கள் வாழ்கின்ற வட்டங்கள் மற்றும் கிராமங்களில் பெரும்பாலானவை நாசப்படுத்தப்பட்டன. இப்போது மீட்புப் பணியில் சியாங் இனத்தின் பண்பாட்டு பாணி மைய முக்கியமாகும். ஆப்பா ச்சோவின் துணை தலைவர் சியோ யூ சை இது பற்றி கூறியதாவது.

இந்த நில நடுக்கத்தில் எங்கள் சியாங் இன மக்கள் குவிந்து வாழ்ந்த மோ, வென்ச்சுவான், பெய்ச்சுவான், லீ ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அவற்றை மீட்கும் போக்கில் சியாங் இனத்தின் கட்டிடப் பாணி முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது. தேசிய இனப் பண்பாட்டின் அடிப்படையில் மோ வாமட்டத்தில் சியாங் இனப் பண்பாட்டு கண்காட்சி நிறுவ நாங்கள் தீர்மானித்துள்ளோம். இதற்கான ஆக்கப்பணித்திட்டம் துவங்கியது என்று அவர் கூறினார்.
பெய்ச்சுவான் மாவட்டத்தின் சினா சியாங் கிராமம் இந்த பணித்திட்டத்தன் படி படிப்படியாக மீட்கப்பட்டுள்ளது. மே திங்கள் 12ம் நாள் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் பெய்ச்சுவான் மாவட்டத்தின் ரேக்குமோர் கிராமத்தில் இருந்த சியாங் இன மக்களின் வீடுகள் பெரும்பான்மையாக நாசப்படுத்தப்பட்டன. விளைநிலங்களும் மண் அரிவில் மூழ்கின. இப்போது இந்த இடத்தில் சியாங் இனத்தின் தனிச்சிறப்பியல்பு மிக்க தோற்றம் கொண்ட புதிய கிராமம் கட்டியமைக்கப்பட்டுள்ளது. அதற்கு சினா சியாங் கிராம் என பெயரிடப்பட்டது. சினா என்றால் சியாங் இனத்தின் மிகவும் அழகான தேவி என்று பொருள்படுகின்றது. சினா சியாங் கிராமம் மிகவும் உழகான தேவி வாழ்கின்ற இடமாக பொருள்படுகின்றது.

சினா கிராமத்தின் கட்டுமானத்துக்கு பொறுப்பான ரேக்கு வட்டத்தின் துணைத் தலைவர் யான் சியௌ குவென் சியாங் இன மக்களின் வாழ்க்கை பற்றி திட்டம் பெறுகிறார். சியாங் இன மக்களை பொறுத்தவரை அமைதியாக வாழ்வது முதல் அடியாகும். மேலும் முக்கியமானது இன்பமாக வாழ்வதாகும். சியாங் இன மக்கள் இந்த நிலத்தில் இனப்பெருக்கினால்தான் சியாங் இனப் பண்பாடு தொடர்ந்து வளர்ச்சியடையும் என்று அவர் அறிந்து கொண்டுள்ளார்.
நிலநடுக்கம் முன் இங்கே வாழ்ந்த மக்கள் வேளாண் மற்றும் மேய்ச்சலில் சார்ந்து வாழ்ந்தனர். நிலநடுக்கத்துக்கு பின் புதிய கிராமம் கட்டியமைக்கப்பட்டதை கண்டு மக்கள் சுற்றுலா துறையை நடத்த விரும்புகின்றார்கள். இப்போது எங்களுக்கு ஆரம்ப திட்டம் உண்டு. இப்போது கிராமத்தில் வாழ்கின்ற 71 குடும்பங்களில் சில பகுதி சுற்றுலா துறையில் தங்கியிருப்பதற்கு பொறுப்பு ஏற்கின்றன. சில பகுதி உணவகங்கள் நடத்துகின்றன. சில பகுதி சியாங் இனத்தின் பாடல் நடனம் பூ தேயல் போன்ற சுற்றுலா பண்பாட்டை நடத்துகின்றன. சுற்றுலா துறையை நடத்துவது எங்களை பொறுத்தவரை இப்போது நல்ல வாய்ப்பாகும் என்று அவர் கூறினார்.
சியாங் இனப் பண்பாடு பொன் நூலால் போன்றுகின்றது. சியாங் இன மக்களுடனும் சீன மக்களுடனும் இணைக்கின்றது. சியாங் இனப் பண்பாடு நிலநடுக்கத்திலிருந்து மீண்டும் உயிர் பெற்று மேலும் அழகான ஒலி வீச மக்கள் இதயப்பூர்வமாக வாழ்கின்றனர்.
நேயர்கள் இது வரை மீண்டும் உயிர் பெற்றுள்ள சியாங் இனப் பண்பாடு பற்றி கேட்டிர்கள். நாளை மீண்டும் சந்திப்போம்.
1 2