• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-04 10:22:22    
நவ சீனா நிறுவப்பட்ட 60 ஆண்டுகால அறிவியல் தொழில் நுட்பச் சாதனை

cri

இவ்வாண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவாகும். கடந்த 60 ஆண்டுகளாக, சீனாவின் அறிவியல் தொழில் நுட்ப லட்சியம் படிப்படியாக முன்னேற்றமடைந்து வந்துள்ளது. இன்றைய நிகழ்ச்சியில், விண்வெளியில் சீனர் முதன்முறையாக நடந்ததை குறிப்பாக, நவ சீனா நிறுவப்பட்ட 60 ஆண்டுகளில் விண்வெளி தொழில் நுட்பத்தில் சீனா படைத்த சாதனைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.
"சென்செள 7 எனும் விண்கலத்தின் உள்ளேயிருந்து வெளியே வருகின்றேன். உடல் நலத்துடன் இருக்கின்றேன். சீன மக்களுக்கும் உலக மக்களுக்கும் வணக்கம் தெரிவிக்கின்றேன் " இது Zhai Zhi Gang அவர்களின் குரல்.
2008ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் நாள், புவியிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விண்வெளியில், சீன விண்வெளிவீரர் Zhai Zhi Gang, முதன்முறையாக நடந்தார். உலகில், ரஷியா மற்றும் அமெரிக்காவை அடுத்து, விண்வெளியில் விண்கலத்தின் உள்ளேயிருந்து வெளியே வந்து நடக்கும் தொழில் நுட்பத்தை கொண்ட மூன்றாவது நாடாக சீனா மாறியுள்ளது.


நவ சீனா நிறுவப்பட்ட துவக்கத்தில், அறிவியல் தொழில் நுட்ப லட்சியத்தை வளர்ப்பதை, முக்கிய இடத்தில் வைத்து, அறிவியல் தொழில் நுட்பத்தின் எதிர்கால வளர்ச்சி தொடர்பான பணித்திட்டத்தை சீனா வகுத்தது. 1964ஆம் ஆண்டு, சீனா, முதல் அணுகுண்டை வெற்றிகரமாக சோதனை செய்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பின், சீனா முதல் ஹைட்ரஜன் குண்டை வெற்றிகரமாக சோதனை செய்தது. 1970ஆம் ஆண்டு, Dong Fang Hong 1 என்னும் சீனாவின் முதலாவது செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. அறிவியல் ஆய்வுத்துறையிலான வெற்றிகள், சீனாவின் அறிவியல் தொழில் நுட்ப ஆற்றலையும், தேசிய பாதுகாப்பு ஆற்றலையும் வலுப்படுத்தியுள்ளது மட்டுமல்ல, சர்வதேச அரங்கில் சீனாவை முக்கிய தகுநிலைக்கு இட்டு சென்றுள்ளன. அதே வேளையில் சீனாவின் எதிர்கால விண்வெளி ஆராய்ச்சிக்கு தொழில் நுட்பங்கள் மற்றும் திறமைசாலிகளை இது வழங்கியுள்ளது. சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் Mei Yong Hong கூறியதாவது:
"சீனாவில் அறிவியல் தொழில் நுட்பத்துறையில் அதிகமான அனுபவங்கள் சேமிக்கப்பட்டுள்ளன. உலகில் அரிதாக காணப்படும் முழுமையான அறிவியல் தொழில் நுட்ப முறைமை சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளது. தவிர, ஆய்வாளர்கள் உள்ளிட்ட அறிவியல் தொழில் நுட்பத் திறமைசாலிகள் சீனாவில் அதிகமாக உள்ளனர். மேற்கூறிய துறைகளை கொண்டுள்ளதால், சீனா உலகில் முன்னணியில் இடம்பெறுகின்றது" என்றார், அவர்.
அறிவியல் தொழில் நுட்பச் சாதனைகளினால், தத்தமது வாழ்க்கையில் ஏற்படும் பெரும் மாற்றங்களை சீன மக்கள் முழுமையாக அனுபவிக்கும் வேளையில், அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி தந்துள்ள பெருமையையும் உணர்ந்து கொண்டுள்ளனர். மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி திட்டப்பணி பற்றி நகரவாசி Wang அம்மையார் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:
"மிகவும் பெருமை கொள்கின்றேன். நாட்டின் அறிவியல் தொழில் நுட்ப ஆற்றலின் உயர் வேக வளர்ச்சியையும், நாட்டின் ஒட்டுமொத்த ஆற்றலின் உயர்வையும் இது அடையாளப்படுத்துகிறது. இது பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. விண்வெளிக்கு செல்பவர்களே 'நீங்கள் தேசிய வீரர்களாகிறீர்கள் என்று விண்வெளி வீரர்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்'" என்று அவர் கூறினார்.


கடந்த நூற்றாண்டின் 90ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில், மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி திட்டப்பணி அதிகாரப்பூர்வமாக துவங்கியது. மனிதரை ஏற்றிச்செல்லும் முதலாவது விண்வெளி பயணத்துக்கு முன், 15 வகைகளைச் சேர்ந்த 50க்கு அதிகமான செயற்கைக் கோள்களை சீனா தற்சார்பாக ஆராய்ந்து தயாரித்து, செலுத்தியிருந்தது. தவிர, வெவ்வேறு மாதிரிகளைச் சேர்ந்த பத்துக்கு அதிகமான Chang Zheng தொகுதி ராக்கெட்டுகளைப் ஆராய்ந்து தயாரித்து, 70க்கு அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.
இதற்கிடையில், புவியிலிருந்து மேலும் தொலை தூரத்தில் உள்ள சந்திர மண்டலம் மீது சீனர்கள் குறி வைத்துள்ளனர். 2007ஆம் ஆண்டின் அக்டோபர் திங்கள், சீனாவின் முதலாவது சந்திர மண்டல ஆய்வு செயற்கைக் கோளான Chang E 1 விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கு பிந்திய ஓராண்டு காலத்தில், திட்டமிட்டப்படி இந்த விண்கலம், பல்வேறு ஆய்வுக் கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றியது. சந்திர மண்டலத்தைச் சுற்றி வரும் ஆய்வு திட்டப்பணியின் வடிவமைப்பாளர் திரு Sun Jia Dong, சீன வானொலி செய்தியாளருக்குப் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:


"முன்னதாக, சீனாவின் அனைத்து விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளும், புவியிலிருந்து குறுகிய தூரத்தில் உள்ள விண்வெளியில் நடைபெற்றன. அதாவது, புவியிலிருந்து சில நூறு கிலோமீட்டர் முதல், சில ஆயிரம் கிலோமீட்டர் மற்றும் சில பத்து ஆயிரம் கிலோமீட்டர் வரையான விண்வெளியில்தான் ஆய்வுகள் செய்தோம். நாங்கள் குறிப்பிட்ட விண்வெளி தொழில் நுட்பங்களை உள்வாங்கிக் கொண்டப் பிறகு, புவியிலிருந்து மேலும் தொலை தூரத்தில் உள்ள அண்ட வெளியை ஆய்வு செய்யும் நடவடிக்கைகளை துவக்குவது உறுதி. சந்திர மண்டலம் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்வது, முதலாவது காலடியாகும்" என்றார், அவர்.