• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-08 21:28:11    
ஹு சிங்தாவின் லத்தின் அமெரிக்கப் பயணம்

cri

சீன அரசு தலைவர் ஹு சிந்தாவ் வெகு விரைவில் ிரேசில், ஆர்ஜென்டினா, சிலி, கியூபா ஆகிய நான்கு லத்தின் அமெரிக்க நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொள்வார். அவர்தம் இந்த லத்தின் அமெரிக்கப் பயணமானது, சீனாவுக்கும், இந்நான்கு நாடுகளுக்கும், ஏன் முழு லத்தின் அமெரிக்கப் பிரதேசத்துக்குமிடையிலான உறவின் வளர்ச்சியை பெரிதும் முன்னேற்றுவிக்க உள்ளதாகவும், சீன-லத்தின் அமெரிக்க நட்பார்ந்த ஒத்துழைப்புறவின் வளர்ச்சிக்கு பரந்த எதிர்காலம் உண்டு என்றும் சீன அறிஞர் கருதுகின்றார்.

சீனா, இந்நான்கு நாடுகள் உள்ளிட்ட லத்தின் அமெரிக்காவின் முக்கிய நாடுகளுடன் தூதாண்மை உறவு நிறுவிய பின், இரு தரப்புகளின் உயர் நிலை பயணப் பரிமாற்றம் இடைவிடாமல் நடைபெற்று வருகின்றது. பல்வேறு துறைகளிலான நட்பார்ந்த ஒத்துழைப்புறவு பன்முகங்களிலும் ஆழமான முறையிலும் வளர்ச்சியுற்று வருகின்றது. சீன சமூக அறிவியல் கழக லத்தின் அமெரிக்க ஆய்வகத்தின் துணைத் தலைவர் Jiang Shi Xue இவ்வாறு தெரிவித்தார்.

சீன-லத்தின் அமெரிக்க அரசியல், தூதாண்மை உறவு தங்கு தடையின்றி வளர்ச்சியுறும் அதே வேளையில், இரு தரப்பின் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பும் பெரும் சாதனையை பெறும் என்று அவர் தெரிவித்தார்.