கட்டிடத்துக்குள் நுழைந்தவுடனே, மண்டபத்தில் ஒரு மிகப் பெரிய நீலத் திமிங்கிலத்தின் மாதிரி சான்றைக் காணலாம். மனித குலம் அறிந்து கொண்டுள்ள சுமார் 15 இலட்சம் விலங்குகளின் வகைகளில் நீலத் திமிங்கிலம் மிகப் பெரியதாகும். புதிதாக பிறந்த நீலத் திமிங்கிலத்தின் எடை 2.5 டன்னாகும். உடல் நீளம் 7 மீட்டராகும். வயதாகிய நீலத் திமிங்கிலத்தின் உடல் நீளம் 33 மீட்டர் வரை இருக்கும்.
சரி மிகப் பெரிய கடல் வாழ் இனத்தை பார்த்து அறிந்து கொண்டுள்ளோம். மிகச் சிறியது என்ன?முதுகெலும்பில்லா உயிரின காட்சி மண்டபத்துக்குச் சென்று பார்ப்போம்.