அடுத்து பெய்ஜிங் நகருக்கு கிழக்கே சுங் ட்சுவாங் எனும் இடத்தில் அமைந்துள்ள தாட்சி வானொலி பெட்டி மற்றும் திரைப்படக் கருவி அருங்காட்சியகத்துக்குச் சென்று பார்ப்போம்.
லுமிஏர் சகோதரிகள் கண்டுபிடித்த திரைப்படக் கருவி முதல் கடைசியான film திரைப்படக் கருவி வரை, அதாவது 1890ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை தோன்றிய திரைப்படக் கருவி வகைகள் அனைத்தும் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிக முன்னதாக்க் கண்டுபிடிக்கப்பட்ட திரைப்படக் கருவி மண்ணெண்ணெய் மூலமாக ஒளியை வழங்கும் தன்மை கொண்டதாகக் காணப்படுகின்றது.
வானொலிப் பெட்டிகளின் எண்ணிக்கை மேலும் அதிகம். 3000க்கு மேலான வானொலிப் பெட்டிகள் இங்கு உள்ளன. சீனாவில் தயாரிக்கப்பட்ட பண்டா1501, துங்ஃபாங்குங், ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தற்போது உலகளவில் பத்துக்கு குறைவாக பாதுகாக்கப்பட்ட வானொலி பெட்டிகள் முதலியவை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.