சீன வானொலி நிலையம் 1941ம் ஆண்டு டிசெம்பர் திங்கள் 3ம் நாள் ஒலிபரப்பைத் துவங்கியது. துவக்கத்தில் ஜப்பானிய மட்டும் 15 நிமிடத்திற்கு ஒலிபரப்பானது. 60 ஆண்டுகளுக்குப் பின் 38 அந்நிய மொழிகள் சீன மொழி மற்றும் 4 உள்ளூர் மொழிகள் என நாளுக்கு 233 மணி நேரம் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.
செய்திகள், செய்தித் தொகுப்பு, அரசியல், பொருளாதாரம், பண்பாடு, அறிவியல் தொழில்நுட்பம் முதலியவற்றுடன் தொடர்புடைய சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகியவை வானொலி நிலையத்தின் பல்வேறு மொழிப் பிரிவுகளின் நிகழ்ச்சிக் கட்டனமாகும். நிகழ்ச்சிகள் உலகமெங்கும் ஒலிக்கின்றன. அளவிலும் சரி, செல்வாக்கிலும் சரி, விஓஏ, பி.பி.சி ஆகியவற்றையடுத்து சீன வானொலி நிலையம் உலகில் மூன்றாவது சர்வதேச வானொலி நிலையமாக வளர்ந்துள்ளது. 1984ம் ஆண்டு முதல் உள்நாட்டில் 2 வரிசைகளில் அந்நிய மொழிகள் ஒலிபரப்பலாயின. 91.5 எப்எம், 1251கிஹெர்ட்ஸ் ஏஎம் வரிசையில் ஆங்கில மொழி பெய்சிங் மாநகர் பிரதேசத்திற்கு ஒலிபரப்பாகின்றது. ஆங்கிலம், ஸ்பேனிஷ், அரபு, ஜெர்மன், கொரிய, ஜப்பானிய மற்றும் ரஷிய மொழிகளில் இசை நிகழ்ச்சி ஒலிபரப்பாகின்றது.
27 சீன வானொலி செய்தியாளர் நிலையங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் நிறுவப்பட்டுள்ளன. தவிர, சீனாவின் பல்வேறு மாநிலங்கள் மாநகரங்கள் தன்னாட்சிப் பிரதேசங்கள் ஆகியவற்றிலும் ஹாங்காஹ் மற்றும் மகௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசங்களிலும் செய்தியாளர் நிலையம் அமைந்துள்ளது. இதன் மூலம் மாபெரும் தகவல் வலைப்பின்னல் உருவாகியுள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், ஸவிட்சர்லாந்து, ரஷியா, ஸ்பெனிஷ், கனடா, மாலி, பிரேசில், கியூபா, அமெரிக்கா முதலிய 10க்கும் அதிகமான நாடுகள் பிரதேசங்களின் வானொலி நிலையங்களுடன் நிகழ்ச்சி ஒத்துழைப்புறவை 1987ம் ஆண்டு முதல் சீன வானொலி நிலையம் மேற்கொள்ள துவங்கியது.
ஆண்டுதோறும் சுமார் 200 நாடுகள் பிரதேசங்களில் வாழ்கின்ற நேயர்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன. வெளிநாட்டு நேயர்கள் விரைவாகவும் வசதியாகவும் பயன் தரும் முறையிலும் சீனாவை அறிந்து கொள்ளும் வழிமுறையாக சீன வானொலி நிலையம் மாறியுள்ளது. 2002ம் ஆண்டில் 11 லட்சத்து 70 ஆயிரம் நேயர் கடிதங்கள் சீன வானொலிக்கு வந்து சேர்ந்தன.
1998ம் ஆண்டு டிசெம்பர் திங்களில் சீனா வானொலி நிலையம் தனது இணைய தளத்தைத் துவக்கியுள்ளது. தற்போது சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு மொழி, ஜெர்மன், ஜப்பானிய, ரஷிய மொழி, ஸ்பெனிஷ் மொழி, போர்த்துக்கீசிய மொழி உள்ளிட்ட 16 அந்நிய மொழிகளிலும் 17 மொழி இணையக் கிளைகள் இடம் பெறும் பன்னோக்க இணையத் தொகுதி நிறுவப்பட்டுள்ளது.
2000ம் ஆண்டில் சீன வானொலி நிலையத்தின் இணைய தளம் அரசின் முக்கிய செய்தி இணைய தளமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது முதல் வெளிநாட்டு வானொலிகளின் மூலம் அதன் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் ஆற்றலை அதிகரித்துள்ளது. 2003ம் ஆண்டு ஜுலை திங்கள் முதல் ஆங்கிலம், ரிஷிய மொழி, ஜெர்மன், பிரெஞ்சு மொழி, ஸ்பெனிஷ் மொழி உள்ளிட்ட 16 அந்நிய மொழிகள் நாளுக்கு நாள் சுமார் 80 மணி நேரத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா, ஸபெயின் முதலிய நாடுகளின் ஏஎம், எப் எம் அலைவரிசை மூலம் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒலிபரப்புகின்றது. இதை நேயர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
|