|
|
(GMT+08:00)
2003-12-22 10:28:50
|
|
கத்தரிக்காய் பச்சடி அதாவது சோ சியெ சு
cri
தயாரிப்பதற்குத் தேவையானவை பின்வருமாறு.
கத்தரிக்காய் 750 கிராம்.
காய்ந்த சிவப்பு மிளகாய் 25 கிராம்.
சமையல் எண்ணெய் 500 கிராம் (இதில் 100 கிராம் மட்டுமே செலவாகும்) மக்காச்சோள ஸ்டார்ச் தண்ணீர் கலவை 10 கிராம்.
சோயா சாஸ் 50 கிராம்.
உப்பு சிறிதளவு..
சிறிய வெங்காயம் 2 கிராம்,
இஞ்சி 2 கிராம்.
பூண்டு 2 கிராம்,
நல்லெண்ணெய் 10 கிராம்,
வினிகர் அல்லது புளிச்சாறு 15 கிராம்.
செய்முறை.
காம்புகளை நீக்கி விட்டு கத்தரிக்காய்களைச் சுத்தம் செய்ய வேண்டும். 3 சென்டிமீட்டர் அளவு இருக்குமாறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சிவப்பு மிளகாயைக் கழுவி சுத்தம் செய்து விதைகளை அகற்றிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் ,இஞ்சி, பூண்டு ஆகியவற்றையும் நறுக்கிக் கொள்ளவும் . வாணலியை அடுப்பின் மீது வைத்து, சமையல் எண்ணெயை ஊற்றி காயவிடவும் பிறகு கத்தரிக்காய் துண்டுகளை அதில் கொட்டி , 2 நிமிடத்துக்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
50 கிராம் எண்ணெயை வாணலியில் நிறுத்தி , வெங்காயம் ,இஞ்சி, பூண்டு , மிளகாய், சோயா சாஸ், ஆகியவற்றை அதில் கொட்டவும். லேசாக வறுத்த பின்பு, ஏற்கனவே வறுத்துவைத்த கத்தரிக்காயை அதில் சேர்க்கவும். தீயின் அளவைக் குறைத்து. 3 நிமிடம் எரிய விடவும். பிறகு தீயின் அளவை அதிகரித்து சாஸ் கெட்டியாகுமாறு செய்து ஸடார்ச் சண்ணீர் கலவை நல்லெண்ணெய் ஆகிவற்றை அதில் ஊற்றவும். பின்பு , தட்டுக்கு மாற்றிக் கொள்ளலாம். இப்போது கத்தரிக்காய் பச்சடி தயார்,
இதன் சிறுப்பியல்புகள்.
வெளிப்புறம் மொறமொற என்றும் உட்புறம் மிருதுவாகவும் இருக்கும். சுவையைப் பொறுத்தவரை, காரமாக இருக்கும். துணிந்து தயாரித்து
|
|
|