|
![](/images/spacer.gif) |
(GMT+08:00)
2003-12-22 10:28:50
|
![](/images/shim.gif) |
உருளை பச்சை மிளகாய் வறுவல் (சின்சியா துதொ)
cri
தேவையானவற்றின் பட்டியல்
உருளைக் கிழங்கு 200 கிராம்.
குண்டு பச்சை மிளகாய் 50 கிராம்..
சமையல் எண்ணெய் 50 கிராம்.,
உப்பு 1 கிராம்., சர்க்கரை 0.5 கிராம்,
ஸ்டார்ச் தண்ணீர் கலவை 5 கிராம்
இனி , செய்முறை
குண்டு பச்சை மிளகாய்களைத் தண்ணீரில் நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். விதைகளை நீக்கிவிட்டு நீளவாட்டில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.அவற்றை ஒரு தட்டில் வைக்கவும். உருளைக் கிழங்குகளைத் தண்ணீரில் கழுவி, தோலை நீக்கிவிட வேண்டும். மீண்டும் தண்ணீரில் சுத்தப்படுத்த வேண்டும். பிறகு , மிளகாயை நீளவாட்டில் நறுக்கியது போல உருளைக் கிழங்குகளையும் நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குச்சி போல அவை நீண்டு தோற்றம் அளிக்க வேண்டும்.
இப்போது வாணலியை அடுப்பின் மீது வைத்து சமையல் எண்ணெயை அதில் ஊற்றி சூடாக்கவும். அதன் பிறகு உருளைத் துண்டுகளைக் கொட்டி சற்றே வறுத்திட வேண்டும். அதன் பின்னர், பச்சை மிளகாய்த் துண்டுகள் , சர்க்கரை , உப்பு ஆகியவற்றை அதில் கொட்டி நன்றாகக் கலக்க வேண்டும். சற்று நேரம் கழிந்த பின், ,ஸ்டார்ச் சண்ணீர் கலவையை அதில் சேர்க்கலாம். இப்போது உருளை மிளகாய் வறுவல் தயார்.
செலவு குறைவு, நேரமும் குறைவு என்பது இதன் தனிச்சிறப்பு.
தரம் மிகுந்த சீன உணவு வகை இது
|
|
|