• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2003-12-22 14:59:00    
ஆப்பிள் ஜாம்

cri
ஆப்பிள் 1 கிலோ சர்க்கரை 500 கிராம் உப்பு சிறிதளவு எலுமிச்சை சாறு சிறிதளவு செய்முறை ஆப்பிள்களை நன்றாகச் சுத்தம் செய்து, தோலைச் சீவி விதைகளை அகற்ற வேண்டும். சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அவற்றை மிக்சியில் போட்டு உப்பையும் பாதியளவு சர்க்கரையையும் கலந்து நன்றாக அரைக்க வேண்டும். நன்றாகச் சாறு வரும்வரை அரைக்க வேண்டும். இப்போது அடுப்பின் மீது வாணலியை வைத்து லேசாகச் சூடாக்கி இந்தச் சாற்றை அதில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். கொதிவரும் போது, குச்சியால் நன்றாக கலக்க வேண்டும். கொதிவரும்போது மேலே தோன்றும் நுரையை, அகற்றி விடுவது நல்லது. நன்றாக குழம்பு மாதிரி ஆகும் வரை கலக்க வேண்டும். ஆப்பிள் குழம்பு கறுப்பு நிறத்திற்கு வரும் போது எலுமிச்சை சாற்றை அதில் ஊற்றி , சற்று நேரம் கொதிக்க விட வேண்டும். பிறகு, அடுப்புத் தீயை அணைத்து விட வேண்டும். சூடு ஆறிய பிறகு ஆப்பின் ஜாமை பாட்டிலுக்கு மாற்றி லேசான பிளாஸ்டிக் உறையால் மூடி, அதன் மீது மூடியைப் பொருத்த வேண்டும். பிரிட்ஜில் தான் அதை வைக்க வேண்டும்.