|
|
(GMT+08:00)
2003-12-22 14:59:00
|
|
பூசணி கட்லெட்
cri
தேவையானவை இதோ
பூசணி 500 கிராம்
காளான் 10 கிராம்
கேரட் 10 கிராம்
உப்பு 2 கிராம்
மிளகுத் தூள் 1 கிராம்
சமையல் எண்ணெய் 50 கிராம்
மக்காச் சோள ஸ்டார்ச் தண்ணீர் கலவை 50 கிராம்
செய்முறை
பூசணி விதைகளை அகற்றிவிட்டு 5 சென்டி மீட்டர் அகலம் இருக்குமாறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். குழிப் பந்து போல துண்டுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.ஏதேனும் பந்து வடிவ மோல்ட் இதற்குப் பயன்படுத்தலாம். குழி உள்ள கிண்ணம் போல் தோற்றம் தருமாறு அமைத்துக் கொள்ளவும். காளான் கேரட் இரண்டையும் நன்றாக மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை ஊற்றி, சூடாக்கவும் மசியலை அதில் கொட்டி 3 முதல் 5 நிமிடம் வரை வறுக்கவும். பிறகு தண்ணீர் உப்பு, மிளகுத் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். மக்காச்சோள ஸ்டார்ச் தண்ணீர் கலவையில் பாதி அளவை அதில் ஊற்ற வேண்டும். தண்ணீர் வற்றிய பிறகு தட்டுக்கு மாற்றிக் கொள்ளவும்.
பூசணித் துண்டுகளின் குழிப் பகுதியில் தட்டில் எடுத்து வைத்துள்ள மசியலை நிரப்பி 8 நிமிடத்திற்கு ஆவியில் வேக விடவும். பிறகு இன்னொரு தட்டுக்கு மாற்றிக் கொள்ளலாம். எஞ்சிய மக்காச்சோள ஸ்டார்ச் தண்ணீர் கலவையை வாணலியில் ஊற்றி கொதிவருமாறு பார்த்துக் கொள்ளவும். பிறகு அதை பூசணித் துண்டுகளின் மீது ஊற்ற வேண்டும். இப்போது பூசணி கட்லெட் தயார்.
பூசணி சாம்பார் பூசணி பொரியல் , பூசணி கூட்டு என்று அலுத்துப் போனவர்கள் , இந்தக் கட்லெட்டை முயற்சிக்கலாம்.
|
|
|